ETV Bharat / sports

ஆஸ்திரேலியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டி: பிசிசிஐ தகவல்! - விராட் கோலி vs டிம் பெய்ன்

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணி தனது முதல் வெளிநாட்டு பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் என பிசிசிஐ தகவல் வெளியிட்டுள்ளது.

will-india-play-their-first-overseas-day-night-test-in-australia

author img

By

Published : Feb 16, 2020, 9:07 PM IST

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை பகலிரவு டெஸ்ட் போட்டியாக இந்தியா ஆடியது. இதையடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெய்ன், ஆஸ்திரேலியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடியுமா என விராட் கோலிக்கு சவால் விடுத்திருந்தார். இதற்கு இந்திய கேப்டன் விராட் கோலி, நிச்சயம் உலகின் எந்த மைதானத்திலும் இந்திய அணி பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் என பதிலடி கொடுத்தார்.

இதனிடையே ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்து இந்திய அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. அந்த தொடரின்போது இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஒரு போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகலிரவு டெஸ்ட் போட்டி
பகலிரவு டெஸ்ட் போட்டி

இதுகுறித்து பிசிசிஐ அலுவலர், ''ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணி பகலிரவு டெஸ்ட் போட்டியில் நிச்சயம் பங்கேற்கும்'' என உறுதிபட கூறியுள்ளார். இதுவரை ஆஸ்திரேலிய அணி ஆறு பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று, ஆறு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. இதனால் இந்தியா - ஆஸ்திரேலியா ஆடும் பகலிரவு டெஸ்ட் போட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை ஆஃப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகளைத் தவிர்த்து டெஸ்ட் போட்டிகளை ஆடும் அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விட்டுவைத்த களத்திலே சிங்கம் ஒன்று நுழையுதோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.