ETV Bharat / sports

மூன்று சுற்று கரோனா பரிசோதனை: வெஸ்ட் இண்டீஸ் VS நியூசிலாந்து டி20 தொடர்! - cricket new zealand

கிறிஸ்டின் சர்ச்: நியூசிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் மூன்று சுற்று கரோனா பரிசோதனை முடிந்து ஆக்லாந்தில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள தயாராக உள்ளனர்.

west indies
west indies
author img

By

Published : Nov 25, 2020, 10:30 PM IST

ஐக்கிய அரபு அமீரகத்தில் 2020ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் டி20 போட்டி செப்டம்பர் மாதம் தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி நிறைவு பெற்றது. ஐபிஎல் போட்டிகள் முடிந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நியூசிலாந்து சென்றனர்.

நியூசிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மோதுகிறது. மூன்று டி20 தொடர்கள் நவம்பர் 27, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. முதல் டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் டிச.3ஆம் தேதியும், 2ஆவது டெஸ்ட் வெலிங்டனில் டிச.11ஆம் தேதியும் தொடங்குகிறது. டி20 அணியின் கேப்டனாக கிரன் பொல்லார்ட், ஜேசன் ஹோல்டர் டெஸ்ட் அணியின் கேப்டனாக உள்ளனர்.

ஐபிஎல் போட்டி முடிந்ததும் நியூசிலாந்து வந்த வீரர்கள் கிரன் பொல்லார்ட், ஜேசன் ஹோல்டர், ஃபாபியன் ஆலன், சிம்ரோன் ஹெட்மையர், கீமோ பால், நிக்கோலஸ் பூரன், ஒஷானே தாமஸ் ஆகியோர் கரோனா பரிசோதனைக்கு பின் தனிமைப்படுத்திக்கொண்டனர்.

மீதமுள்ள மேற்கிந்திய வீரர்கள் அக்டோபர் 30ஆம் தேதி நியூசிலாந்து வந்த நிலையில், அந்நாட்டு முறைப்படி கரோனா பரிசோதனை மேற்கொண்டு, 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொண்டனர். தற்போது மூன்றாவது சுற்று கரோனா பரிசோதனை முடிந்த நிலையில் அணியில் எவருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

கரோனா பரிசோதனை முடிந்து பயிற்சியில் ஈடுபட்டனர். பின்பு குயின்ஸ்டவுனில் நவ. 20 -22ஆம் தேதி வரை நியூசிலாந்து அணியுடன் பயிற்சி ஆட்டம் நடந்தது.

மே.இந்திய தீவுகள் அணியில் நீண்ட நாள்களாக நீக்கப்பட்டிருந்த டேரன் பிராவோ மீண்டும் அணிக்குள் வந்துள்ளார். அதேபோன்று டி20 தொடரில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன், வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. டிம் சவூத்தி கேப்டன் பொறுப்பேற்கிறார். முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியா vs ஆஸ்திரேலியா தொடர் : போட்டி அட்டவணை, அணி விவரம் குறித்த தகவல்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.