ஆப்கானிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி லக்னோவில் இன்று தொடங்கியது.
இதில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கான் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் இப்ராஹிம் சட்ரான்(2), ரஹ்மத் ஷா(10) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதன் பின் மறுமுனையில் களமிறங்கிய ஹஸ்ரத்துல்லா ஸசாய், ஆஸ்கர் ஆஃப்கான் இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தினர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இவர்கள் இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.
இதில் ஸசாய் 50 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின் ஆஸ்கர் ஆஃப்கானுடன் ஜோடி சேர்ந்த முகமது நபி எதிரணியின் பந்துவீச்சை மைதானம் முழுவதும் பறக்கவிட்டனர்.
ஆப்கானிஸ்தான் அணியின் சீனியர் வீரரான ஆஸ்கர் ஆஃப்கான் தனது சிறப்பான ஆட்டத்தால் 86 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய முகமது நபி இறுதி வரை ஆட்டமிழக்காமல் அரைசதமடித்து அசத்தினார்.
இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 249 ரன்களை எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கீமோ பால் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதன்பின் தற்போது 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.
இதையும் படிங்க: ஐசிசி ரேங்கிங்ஸ்: டி20 கிரிக்கெட் வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!