ETV Bharat / sports

பார்த்தீவை முகத்தில் குத்துவேன் என மிரட்டிய ஹெய்டன்...! - Hayden 'threatened to punch' Parthiv Patel in his face

2004ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நடந்த போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரர் ஹெய்டன் தன்னை முகத்தில் குத்துவேன் என மிரட்டியதாக இந்திய வீரர் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார்.

when-hayden-threatened-to-punch-parthiv-patel-in-his-face

author img

By

Published : May 7, 2020, 10:36 PM IST

கரோனா வைரஸ் காரணமாக விளையாட்டுப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் விளையாட்டு வீரர்கள் சமூகவலைதளங்களில் ரசிகர்களுடன் பேசுவது, நேர்காணலில் பங்கேற்பது என நாஸ்டால்ஜியா சம்பவங்களை கூறிவருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நேர்காணலில் இந்திய வீரர் பார்த்தீவ் படேல் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹெய்டன் தன்னை மிரட்டிய சம்பவம் பற்றி பேசியுள்ளார்.

அதில், ''2004ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி ஆடியது. பிரிஸ்பேனில் நடந்த ஒரு போட்டியில் ஹெய்டன் சதம் விளாசி சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார். ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் இர்ஃபான் பதான் அவரது விக்கெட்டை வீழ்த்தியதும், நான் அவரது அருகில் சென்று ஸ்லெட்ஜிங் செய்தேன்.

அது அவருக்கு அதீத கோபத்தை ஏற்படுத்தியது. அவர் ஆஸ்திரேலிய அணியின் ட்ரெஸிங் ரூம் தொடக்கத்திலேயே நின்றிருந்தார்.

ஆட்டம் முடிந்து நான் ட்ரெஸிங் ரூம் நோக்கி சென்றபோது அவர் என்னிடம், மீண்டும் என்னை இதேபோல் சீண்டினால் உன் மூஞ்சியில் குத்து விழும் எனக் கூறினார். அதன்பின் நான் மன்னிப்பு கேட்டேன்.

ஐபிஎல் தொடரின்போது சிஎஸ்கே அணிக்காக இருவரும் ஒன்றாக தொடக்கம் கொடுத்தோம். அவருடன் களமிறங்குவது மிகவும் சந்தோஷமாக இருக்கும். அப்போது நாங்கள் நல்ல நண்பர்களானோம். நான் ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது அவர் என்னை வீட்டிற்கு அழைத்திருந்தார். எனக்காக பிரியாணி செய்துக்கொடுத்தார்'' என பல சம்பவங்களைக் கூறினார்.

இதையும் படிங்க: முரளி விஜய்-க்கு பதில் கொடுத்த ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லீஸ் பெர்ரி...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.