ETV Bharat / sports

பந்தை 90 மைல் வேகத்தில் எறியாதீங்க... ஆர்ச்சருக்கு அறிவுரை கூறிய வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை - காயத்தால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ஜோஃப்ரா ஆர்ச்சர்

இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், காயத்திலிருந்து தப்பிப்பதற்கு வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை ஹைலே மேத்யூஸ் அறிவுரை கூறி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

jofra archer
jofra archer
author img

By

Published : Feb 6, 2020, 11:43 PM IST

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருந்தார். நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் மட்டும் பங்கேற்ற ஆர்ச்சர், அதன் பின் பயிற்சியின் போது வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். எனினும் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 எனக் கைப்பற்றி அசத்தியது.

இதனிடையே இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், முழங்கையில் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஏற்பட்டுள்ள முறிவு காரணமாக அவர் அடுத்ததாக நடைபெறவுள்ள இலங்கை அணிக்கு எதிரான தொடர், ஐபிஎல் ஆகிய தொடர்களில் பங்கேற்க மாட்டார் என இன்று அறிவித்தது.

ஐபிஎல் தொடரில் கடந்த இரண்டு சீசன்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஜோஃப்ரா ஆர்ச்சர் அந்த அணியின் முன்னணி பந்துவீச்சாளராக உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 21 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இதுவை 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் அவர் களமிறங்க முடியாததால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழந்துள்ளனர்.

jofra archer
ஜோஃப்ரா ஆர்ச்சர்

இதனிடையே ஜோஃப்ரா ஆர்ச்சர், விரைவில் காயத்திலிருந்து மீண்டு வருவேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதைக் கண்ட ரசிகர்கள் பலரும் விரைவில் குணமடைந்து அணிக்கு திரும்ப பிராத்தனை செய்வதாக பதிவிட்டனர்.

அதில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஹைலே மேத்யூஸ், மணிக்கு 90 மைல் வேகத்தில் பந்தை எறியாதீர்கள், அப்போது முழங்கையில் காயம் ஏற்படாது என்று கேலியாக பதிவிட்டிருந்தார்.

jofra archer
ரசிகர்களின் ட்வீட்

இதே போன்று மற்றும் சில ரசிகர்கள், ஆர்ச்சர் 2014ஆம் ஆண்டு பதிவிட்ட பழைய ட்வீட்களை குறிப்பிட்டு உங்களுக்கு எப்படி இவ்வளவு வேகமாக தெரிந்தது என்றும் அவரை கலாய்த்து பதிவிட்டனர்.

Intro:Body:

Will be back says Jofra Archer after ruled of IPL due to Injury

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.