விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பை தொடர் தோல்விக்குப் பிறகு, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், ஏற்கனவே இரண்டு டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி நேற்று கயானாவில் நடைபெற்றது.
இதில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 146 ரன்களை எடுத்திருந்தது. இதைத்தொடர்ந்து, பேட்டிங் செய்த இந்திய 19.1 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வி அடைந்தது. சர்வதேச டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி சந்திக்கும் 58ஆவது தோல்வி இதுவாகும்.
இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிக தோல்விகளை பதிவு செய்த அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது. இதனால், வங்கதசேம், இலங்கை (57) இரு அணிகளின் மோசமான சாதனையை வெஸ்ட் இண்டீஸ் அணி தனதாக்கியது. டி20 சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி, டி20ல் இத்தகைய மோசமான சாதனை படைத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
டி20 போட்டிகளில் அதிக தோல்விகளை கண்ட அணிகள்:
- வெஸ்ட் இண்டீஸ் - 58
- இலங்கை / வங்கதேசம் - 57
- நியூசிலாந்து - 56
- ஆஸ்திரேலியா - 54
- பாகிஸ்தான் - 52