ETV Bharat / sports

மைக்கேல் வாகனுக்கு பதிலடி கொடுத்த அக்சர் பட்டேல்! - Axar Patel

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்த கருத்துக்கு அறிமுக வீரர் அக்சர் பட்டேல் பதில் கருத்து தெரிவித்துள்ளார்.

We never complain when we are given green tops overseas: Axar Patel

author img

By

Published : Feb 16, 2021, 10:01 AM IST

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் இந்திய அணி 483 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. வெற்றியை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது.

இந்நிலையில், சென்னை மைதானம் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காகத் தயார்செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்திய அணி வீரர்கள் இப்போட்டியில் வெற்றிபெறும் தருணத்தை எட்டியுள்ளனர் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்திருந்தார். இவரது கருத்து சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக மாறியது.

இதையடுத்து, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய அக்சர் பட்டேல், "சென்னை மைதானத்தின் பிட்ச் மாற்றியமைக்கப்பட்டது என்பது பற்றி பேசுகிறீர்கள் என்றால், எந்தப் பந்தும் தலைக்கவசத்தில் பட்டதாக எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் சாதாரணமாகவே சென்னை மைதானம் சுழற்பந்துக்குச் சாதகமான மைதானம். அதனைத் தவிர ‘பிட்ச்’ பற்றி எனக்கு எந்தவிதமான கருத்தும் இல்லை.

அதேசமயம் நாங்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் குறித்து எப்போதும் புகார் செய்ததில்லை. இருப்பினும் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான, புற்கள் அதிகம் நிறைந்த மைதானங்களிலும்கூட நாங்கள் இதுபோன்று சிறப்பாகச் செயல்பட்டுள்ளோம். அதனால் பிட்ச் பற்றி சிந்திப்பவர்களின் மனநிலையைத்தான் மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன்.

இப்போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினின் ஆட்டம் மிகச்சிறப்பு வாய்ந்தது. பல வருடங்களாக நான் அவருடன் இணைந்து விளையாடிவருகிறேன். அவரது அனுபவங்களிலிருந்து பலவற்றை நான் கற்றறிந்துவருகிறேன். அவருக்கும் எனக்கும் பந்துவீசுவதில் ஒற்றுமை இல்லை என்றாலும், எங்களது மனநிலை ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கு ஏற்றாற்போல் ஒற்றுமையுடனே இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சேப்பாக்கம் மைதானத்தில் பாதுகாப்பை மீறி நுழைந்த மாணவர்: காவல்துறை விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.