ETV Bharat / sports

கேப்டன் ராகுல் டிராவிட்டிற்கு போதிய மதிப்பை நாம் கொடுக்கவில்லை: கம்பீர்

author img

By

Published : Jun 22, 2020, 7:38 PM IST

ஒரு கேப்டனாக ராகுல் டிராவிட்டிற்கு போதிய மதிப்பு கொடுக்கப்படவில்லை என முன்னாள் இந்திய வீரர் கம்பீர் தெரிவித்துள்ளார்.

we-do-not-give-rahul-dravid-enough-credit-for-his-captaincy-gautam-gambhir

இந்திய கேப்டன்கள் என்ற பேச்சு வந்தாலே அனைவருக்கும் கபில் தேவ், கங்குலி, தோனி என்ற பெயர்கள் தான் நினைவுக்கு வரும். ஆனால் டிராவிட்டின் தலைமையில் இந்திய அணி சிறப்பாகவே இருந்தது.

தற்போது டிராவிட் தலைமைப் பற்றி கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ''நான் எனது ஒருநாள் போட்டிகளில் அறிமுகத்தனை கங்குலி கேப்டன்சியிலும், டெஸ்ட் போட்டிகளில் டிராவிட் கேப்டன்சியிலும் அறிமுகமானேன். கேப்டன்சி என்று வருகையில் அனைவரும் கங்குலி, தோனி, விராட் ஆகியோருக்கே அதிக மதிப்பு கொடுக்கிறோம். டிராவிட்டின் கேப்டன்சியை பற்றி பேசுவதில்லை. ஆனால் டிராவிட்டின் கேப்டன்சியில் தான் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளோம்.

ஒரு கிரிக்கெட்டராக இந்திய அணி அவர் அனைத்தையும் செய்துள்ளார். அதேபோல் தான் கேப்டனாகவும். கங்குலி தனது ஆக்ரோஷமான அணுகுமுறையால் ஒருநாள் போட்டிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். அதேபோல் தான் டிராவிட் இந்திய கிரிக்கெட்டில் அதிக தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளார்.

என்னைப் பொறுத்தவரையில் சச்சின் டெண்டுல்கருக்கு இணையான பங்கினை ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட்டுக்காக செய்துள்ளார்'' என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.