ETV Bharat / sports

சச்சினை மீண்டும் சவாலுக்கு இழுத்த யுவராஜ் சிங்! - சச்சினை மீண்டும் சவாலுக்கு இழுத்த யுவராஜ் சிங்!

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங், தனது ட்விட்டரில் மீண்டும் சச்சின் டெண்டுல்கருக்கு சவால் விடுத்துள்ளார்.

Yuvraj challenged again sachin
Yuvraj challenged again sachin
author img

By

Published : May 31, 2020, 10:32 PM IST

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, பொதுமக்கள் அனைவரும் தங்களது வீட்டிலேயே இருந்து வருகின்றனர். இதனால், விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான விளையாட்டு வீரர்கள், சமூக வலைதளங்களில் தங்களது நேரத்தை கழித்து வருகின்றனர்.

அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், 'சமையலறையில் பூரி கட்டையைக் கொண்டு பந்தை தொடர்ச்சியாக அடித்துக் கொண்டிருப்பது போன்ற காணொலி ஒன்றை வெளியிட்டு, அதனை சச்சின் டெண்டுல்கர் செய்து முடிக்கவேண்டும்' என்று சவால் விடுத்துள்ளார்.

மேலும் அக்காணொலியுடன், 'மாஸ்டர் நீங்கள் மைதானத்தில் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளீர்கள். தற்போது அதனை விடுத்து சமையலறையில் என்னுடைய இந்த 100ஐ முறியடியுங்கள். இதனை செய்யும் போது, நீங்கள் சமையலறையில் வேறு எந்த பொருளையும் உடைத்து விடாதீர்கள்' என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, யுவராஜ் சிங் ட்விட்டரில் விடுத்த சவாலை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.