ETV Bharat / sports

கரோனா நேரத்தில் தோனியுடன் பைக் ரைடு செல்லும் ஸிவா! - தோனி மகள் ஸிவா

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது மகளுடன் வீட்டிலுள்ள இடத்தில் இருசக்கர வாகனத்தில் சவாரி செய்யும் காணொலி சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

WATCH: MS Dhoni and his daughter Ziva enjoying a bike ride inside their farmhouse

author img

By

Published : Apr 21, 2020, 6:30 PM IST

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்தியா முழுவதும் இதுவரை 18ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக, இம்மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலகக்கோப்பைத் தொடருக்குப் பிறகு, இந்திய அணியில் இருந்து விடுவித்துக்கொண்டு ஓய்வில் இருக்கும் தோனி, எப்போது மீண்டும் கிரிக்கெட் விளையாட்டிற்குத் திரும்புவார் என்பதே ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இதனிடையே தோனியின் மனைவி சாக்‌ஷி, அவ்வப்போது தோனி அவர் மகளுடன் விளையாடும் வீடியோக்களை சமூக வலை தளங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த வீடியோக்கள் தோனியின் ரசிகர்களால் அதிகமாகப் பகிரப்படுகிறது.

அந்தவகையில் இம்முறை சுய தனிமைப்படுத்துதலை, தனது குடும்பத்தினருடன் மேற்கொண்டு வரும் தோனி, தனது பண்ணைவீட்டிலுள்ள நிலப்பரப்பில் மகள் ஸிவாவுடன் இருசக்கர வாகனத்தில் சுற்றிக்காட்டுவது போன்ற காணொலியை சாக்‌ஷி தோனி வெளியிட்டுள்ளார். மேலும் இக்காணொலியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக கணவர் தோனியுடன் விளையாடுவது போன்ற புகைப்படத்தை சாக்‌ஷி தோனி வெளியிட்டு இணையத்தை அதிர வைத்திருந்தார். அதேபோல் தற்போது தோனி தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் விளையாடுவது போன்ற காணொலியும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இணையத்தை அதிரவைத்த சாக்‌ஷி தோனியின் புகைப்படம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.