கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இம்மாதம் 15ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 தொடர் தற்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரும், சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சியாளருமான லட்சுமிபதி பாலாஜி, ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் மறக்கமுடியாத போட்டிகள் குறித்து காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். இக்காணொலியை சிஎஸ்கே அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அக்காணொலி வாயிலாக பாலாஜி கூறுகையில், "2010ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக தோனி ஆடிய ஆட்டத்தை என்றும் என்னால் மறக்க இயலாது. அச்சமயத்தில் நாங்கள் வெற்றிபெற்றால் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெறுவோம் என்ற சூழ்நிலை.
இறுதியில் தோனி அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்த ஆக்ரோஷத்தில் அவரது ஹெல்மெட்டை குத்தும் காட்சி எந்த சிஎஸ்கே ரசிகனாலும் மறக்க முடியாத தருணம்.
-
Namma @Lbalaji55 picks his favourite #yellove moments. How can we ever get over that sensational hat-trick in a 5fer twelve summers ago?! Nominated next is Mr. Dependable @s_badrinath! #WhistlePodu #MyIPLMoment 🦁💛 pic.twitter.com/AXVd6EvjMF
— Chennai Super Kings (@ChennaiIPL) April 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Namma @Lbalaji55 picks his favourite #yellove moments. How can we ever get over that sensational hat-trick in a 5fer twelve summers ago?! Nominated next is Mr. Dependable @s_badrinath! #WhistlePodu #MyIPLMoment 🦁💛 pic.twitter.com/AXVd6EvjMF
— Chennai Super Kings (@ChennaiIPL) April 19, 2020Namma @Lbalaji55 picks his favourite #yellove moments. How can we ever get over that sensational hat-trick in a 5fer twelve summers ago?! Nominated next is Mr. Dependable @s_badrinath! #WhistlePodu #MyIPLMoment 🦁💛 pic.twitter.com/AXVd6EvjMF
— Chennai Super Kings (@ChennaiIPL) April 19, 2020
அந்தப் பட்டியலில் 2018ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியின்போது வெற்றிபெற்ற தருணமும் உண்டு. ஏனெனில் இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு நாங்கள் மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்றோம்.
அத்தொடரின் முதல் போட்டியில் நாங்கள் மும்பை அணியைச் சந்தித்தோம். அப்போட்டியில் பிராவோ, கேதர் ஜாதவின் அதிரடியால நாங்கள் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது மிகவும் மகிழ்ச்சியளித்த நிகழ்ச்சியாகும்" என்றார்.
இதையும் படிங்க:சிறு வயது முதல் இவர்தான் என்னுடைய ஹீரோ - ஸ்டோய்னிஸ் ஓபன் டாக்!