இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதற்காக இன்று அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தி சென்ற இந்திய அணி, மாலை நேரத்தில் பயிற்சியை மேற்கொண்டது.
அப்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு அணிக்கு திரும்பியுள்ள நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, இந்திய அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டார். இந்த வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது. அதில் அவர், பவுலிங் பயிற்சியாளர் பரத் அருணுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையடுத்து, காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து பும்ரா விலகினார். அதையடுத்து நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
Missed this sight anyone? 🔥🔥🔝
— BCCI (@BCCI) January 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
How's that from @Jaspritbumrah93 #TeamIndia #INDvSL pic.twitter.com/hoZAmnvE2k
Missed this sight anyone? 🔥🔥🔝
How's that from @Jaspritbumrah93 #TeamIndia #INDvSL pic.twitter.com/hoZAmnvE2k
Missed this sight anyone? 🔥🔥🔝
— BCCI (@BCCI) January 3, 2020
How's that from @Jaspritbumrah93 #TeamIndia #INDvSL pic.twitter.com/hoZAmnvE2k
பும்ரா பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: நடுவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுப்மன் கில்!