ETV Bharat / sports

“கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்” - டிம் பெய்ன்! - இந்தியா vs ஆஸ்திரேலியா

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் நாங்கள் வெற்றி பெறுவொம் என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Watch| IND vs AUS: Gavaskar entitled to his opinion, doesn't affect us one bit, says Paine

author img

By

Published : Jan 14, 2021, 2:18 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை (ஜன.15) பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன், பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய டிம் பெய்ன், "நாளைய டெஸ்ட் போட்டியை சிறிது வித்தியாசமான முறையில் கையாளலாம் என்று சிந்தித்து வருகிறேன். ஏனெனில் இப்போட்டியின் முடிவில்தான், இத்தொடரின் வெற்றியாளரும் தெரியவரும். அதனால் நான் இப்போட்டியில் எனது கேப்டன்சி மீது அதிக கவனம் செலுத்தி வருகிறேன். இதன் மூலம் நாங்கள் இப்போட்டியை வெல்வோம் என்ற நம்பிக்கை எனக்குள்ளது" என்று தெரிவித்தார்.

“கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்”

நான்கு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், ஏற்கெனவே நடைபெற்ற மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் ஆஸ்திரேலியாவும், ஒரு போட்டியில் இந்தியாவும், ஒரு போட்டி டிராவிலும் முடிந்துள்ளது. இதனால் நாளை தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: தாய்லாந்து ஓபன்: இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார் சாய்னா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.