கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக உலகம் முழுவதும் இதுவரை 24 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றின் பாதிப்பினால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், உலகின் பல்வெறு வகையாக விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதில் இந்தியாவில் நடைபெறயிருந்த ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் கலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடனும், சமூக வலைதளங்களிலும் நேரத்தை செலவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதிலும் சிலர் தங்களது முடியை திருத்துவது, சமையல் வேளை பார்ப்பது, ஓவியம் வரைவது, பாடல் எழுதுவது போன்ற செயல்களில் இறங்கி நேரத்தை கடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ, தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை மையமாக வைத்து பாடல் ஒன்றை வெளியிடுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தோனிக்காக உருவாக்கிய பாடலின் சில வரிகளை பாடுவது போன்ற காணொலியையும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில் தோனிக்கான பாடலை பிராவோ பாடுவது போன்ற 30 வினாடிகள் கொண்ட காணொலியை வெளியிட்டுள்ளது. இது சென்னை ரசிகர்களாலும், தோனி ரசிகர்களாலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
Champion @DJBravo47's next song is for 'his brudah, his brudah from anodah muddah' - @msdhoni No.7! 😍🦁💛 #AnbuDenLions #WhistlePodu pic.twitter.com/4075ewbJti
— Chennai Super Kings (@ChennaiIPL) April 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Champion @DJBravo47's next song is for 'his brudah, his brudah from anodah muddah' - @msdhoni No.7! 😍🦁💛 #AnbuDenLions #WhistlePodu pic.twitter.com/4075ewbJti
— Chennai Super Kings (@ChennaiIPL) April 20, 2020Champion @DJBravo47's next song is for 'his brudah, his brudah from anodah muddah' - @msdhoni No.7! 😍🦁💛 #AnbuDenLions #WhistlePodu pic.twitter.com/4075ewbJti
— Chennai Super Kings (@ChennaiIPL) April 20, 2020
வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த பிராவோ, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராகவும் இருந்துவருகிறார். சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் நேரலையின் போது, தோனி தனது சகோதரர் என பிராவோ கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தோனி எப்போதும் என்மீது நம்பிக்கை வைத்திருந்தார் - பிராவோ!