ETV Bharat / sports

காவலர்களுக்குப் பாதுகாப்பு உபகரணத் தொகுப்பு: அனில் கும்ப்ளே வழங்கல்!

பெங்களுரூ: கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவரும் காவல் துறையினருக்கு 1000 பாதுகாப்பு உபகரணத் தொகுப்புகளை ஐசிசி கிரிக்கெட் குழுத் தலைவர் அனில் கும்ப்ளே வழங்கியுள்ளார்.

author img

By

Published : May 28, 2020, 12:00 PM IST

watch-anil-kumble-provides-safety-kits-to-bengaluru-police

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்காக மருத்துவர்கள், செவிலியர், காவல் துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் போராடிவருகின்றனர். இவர்கள் 'கரோனா வாரியர்ஸ்' எனச் சமூக வலைதளங்களில் அழைக்கப்பட்டுவருகின்றனர்.

காவல் துறையினருக்கு பாதுகாப்பு உபகரண தொகுப்புகளை வழங்கிய அனில் கும்ப்ளே

இந்நிலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவரும் பெங்களுரூ காவல் துறையினருக்கு ஐசிசி கிரிக்கெட் குழுத் தலைவர் அனில் கும்ப்ளே, சானிடைசர், சோப், முகமூடி, நோயெதிர்ப்புச் சக்தியை அதிகமாக்கும் மருந்துகள் கொண்ட ஆயிரம் பாதுகாப்பு உபகரணத் தொகுப்பை காவல் ஆணையர் பாஸ்கர் ராவிடம் வழங்கியுள்ளார்.

இதையடுத்து கும்ப்ளே பேசுகையில், ''கரோனா தீநுண்மி தொற்று அனைத்து இடங்களிலும் பரவிவருகிறது. கரோனாவால் சில காவல் துறையினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமூகத்திற்காக இரவு, பகல் பாராமல் பணிபுரிந்துவரும் காவல் துறையினர், தங்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். உடலை ஆரோக்கியமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்'' என்றார்.

இந்தியாவில் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 333ஆக உள்ளது. இதில் 4,538 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: அந்த இரண்டு பந்துகள் என் வாழ்வின் சிறந்த நினைவுகள்... சச்சின் பற்றி ஆஸி. வீராங்கனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.