பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கிய முதல் போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்து ஏமாற்றமளித்தது.
இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி முதல் மெல்போர்னில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, இப்போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளது.
வாசிம் ஜாஃபர் ஹிடன் மெசேஜ்
இந்நிலையில் இரண்டாவது டெஸ்டிலிருந்து இந்திய அணியை வழிநடத்தவுள்ள அஜிங்கியா ரஹானேவுக்கு ட்விட்டர் மூலம் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் ஹிடன் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளாது.
வாசிம் ஜாஃபரின் ட்விட்டர் பதிவில், டியர் ரஹானே, உங்களுக்கு என்னுடைய ஹிடன் மெசேஜ். இதனை பயன்படுத்துங்கள், பாக்ஸிங் டே டெஸ்டில் உங்களுக்கு அதிர்ஷடம் காத்திருக்கு என பதிவிட்டு, அதனுடன் சில ஆங்கில சொற்களையும் இணைத்திருந்தார்.
-
Dear @ajinkyarahane88, here's a (hidden) message for you. Good luck for Boxing Day!
— Wasim Jaffer (@WasimJaffer14) December 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
People
In
Cricket
Know
Grief
In
Life
Lingers
Aplenty
Never
Dabble
Rise
And
Handcraft
Unique
Legacy
PS: you guys are open to have a go and decode the msg too 😉#INDvsAUS #AUSvIND
">Dear @ajinkyarahane88, here's a (hidden) message for you. Good luck for Boxing Day!
— Wasim Jaffer (@WasimJaffer14) December 21, 2020
People
In
Cricket
Know
Grief
In
Life
Lingers
Aplenty
Never
Dabble
Rise
And
Handcraft
Unique
Legacy
PS: you guys are open to have a go and decode the msg too 😉#INDvsAUS #AUSvINDDear @ajinkyarahane88, here's a (hidden) message for you. Good luck for Boxing Day!
— Wasim Jaffer (@WasimJaffer14) December 21, 2020
People
In
Cricket
Know
Grief
In
Life
Lingers
Aplenty
Never
Dabble
Rise
And
Handcraft
Unique
Legacy
PS: you guys are open to have a go and decode the msg too 😉#INDvsAUS #AUSvIND
இதனைக்கண்ட ரசிகர்கள் பலரும், வாசிம் ஜாஃபருக்கு என்ன ஆச்சு? அவர் ஏன் இவ்வாறு உளறுகிறார்? அப்படி இந்த ட்வீட்ல அந்த ஹிடன் மேசேஜும் இல்லையே? என்று புலம்பி வந்தனர்.
வார்த்தை விளையாட்டில் வாசிம்
அதன் பின்னர் வாசிம் ஜாஃபரின் பதிவை சிறிது ஆராய்ந்து பார்த்த சிலர், அதிலிருந்த தகவலை அறிந்துகொண்டனர்.
அவர் அனுப்பிய ஆங்கில வார்த்தைகளின் முதல் எழுத்தை மட்டும் சேர்த்து படித்தால் ‘பிக் கில் அண்ட் ராகுல்’ என்ற வாக்கியம் அடங்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து வாசிம் ஜாஃபரின் இந்த வார்த்தை விளையாடு ட்விட்டர் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க: 'தொடரின் தலையெழுத்தை பாக்ஸிங் டே தீர்மானிக்கும்' - ஜோ பர்ன்ஸ்