கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுக்காப்பதற்கான பணியில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், காவல் துறையினர் ஆகியோரை கரோனா வாரியர்ஸ் என மக்கள் அழைத்து வருகின்றனர். இவர்களின் சேவையைச் சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலக் காவல் துறையினரில் 786 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இது பல்வேறு தரப்பினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர்களைக் கௌரவிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, மகாராஷ்டிர காவல் துறையினரின் அடையாளச் சின்னத்தை தனது ட்விட்டர் பக்கத்தின் முகப்புப் படமாக வைத்துள்ளார்.
அதோடு, ''பேரழிவுகள், தாக்குதல்கள் என எந்தச் சம்பவமாக இருந்தாலும் மக்களுடன் மகாராஷ்டிர காவல் துறை துணை நின்றுள்ளது. தற்போது கரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்திலும் முன்னின்று போராடி வருகின்றனர். அவர்களைச் சிறப்பிக்கும் விதமாக மகாராஷ்டிரா மாநிலக் காவல் துறையினர் அடையாளச் சின்னத்தை எனது ட்விட்டர் முகப்புப் படமாக வைத்துள்ளேஎன். என்னோடு நீங்களும் கைகோக்க வேண்டும்'' எனப் பதிவிட்டார்.
-
Maharashtra Police has stood by citizens through calamities, attacks & disasters. Today as they lead the war against Corona on the streets, I've decided to celebrate them by changing my DP here on Twitter to the Maharashtra Police logo. Join me in this endeavour. 🙏🏼
— Virat Kohli (@imVkohli) May 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Maharashtra Police has stood by citizens through calamities, attacks & disasters. Today as they lead the war against Corona on the streets, I've decided to celebrate them by changing my DP here on Twitter to the Maharashtra Police logo. Join me in this endeavour. 🙏🏼
— Virat Kohli (@imVkohli) May 10, 2020Maharashtra Police has stood by citizens through calamities, attacks & disasters. Today as they lead the war against Corona on the streets, I've decided to celebrate them by changing my DP here on Twitter to the Maharashtra Police logo. Join me in this endeavour. 🙏🏼
— Virat Kohli (@imVkohli) May 10, 2020
இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கானும் தனது ட்விட்டர் முகப்புப் படத்தை மாற்றியுள்ளார். மகாராஷ்டிரா காவல் துறையினருக்கு உதவியளிக்கும் விதமாக விராட் கோலி-அனுஷ்கா ஷர்மா தம்பதி தலா ரூ.5 லட்சத்தை அம்மாநில காவல் துறை நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.
-
Maharashtra Police has stood by citizens through calamities, attacks & disasters. Today as they lead the war on Corona on the streets, I've decided to celebrate them by changing my DP on Twitter to the Maharashtra Police logo. Join me in this endeavour 🙏
— zaheer khan (@ImZaheer) May 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Maharashtra Police has stood by citizens through calamities, attacks & disasters. Today as they lead the war on Corona on the streets, I've decided to celebrate them by changing my DP on Twitter to the Maharashtra Police logo. Join me in this endeavour 🙏
— zaheer khan (@ImZaheer) May 10, 2020Maharashtra Police has stood by citizens through calamities, attacks & disasters. Today as they lead the war on Corona on the streets, I've decided to celebrate them by changing my DP on Twitter to the Maharashtra Police logo. Join me in this endeavour 🙏
— zaheer khan (@ImZaheer) May 10, 2020
கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 786 காவல் துறையினரில் 76 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 7 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள 703 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது... வேதனையில் தென் ஆப்பிரிக்க வீரர்