ETV Bharat / sports

#Kingkohli: ஒரே போட்டியில் ''கிங் கோலி"யின் அடுக்கடுக்கான சாதனைகள்! - சதம் விளாசிய கோலி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 254 ரன்கள் எடுத்ததன் மூலம் பல்வேறு சாதனைகளை இந்திய கேப்டன் விராட் கோலி படைத்துள்ளார்.

கிங் கோலி
author img

By

Published : Oct 11, 2019, 5:57 PM IST

Updated : Oct 13, 2019, 1:04 PM IST

புனேவில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 601 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலி 336 பந்துகளில் 33 பவுண்டரி, 2 சிக்சர் உட்பட 254 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் பல்வேறு சாதனைகளையும் இந்திய கேப்டன் விராட் கோலி தனது வசப்படுத்தியுள்ளார்.

கிங் கோலி
கிங் கோலி

இந்தப் போட்டிக்கு முன்னதாக 10 இன்னிங்ஸ்களில் விராட் கோலி சதம் விளாசவில்லை என்பதால், இந்தப் போட்டியில் நிச்சயம் சதம் விளாசுவார் என்ற எதிர்பார்ப்பு விராட் கோலி ரசிகர்களுக்கு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் தனது 26ஆவது சதத்தைப் பதிவு செய்தார். அதையடுத்து தொடர்ந்து சிறப்பாக ஆடிய கோலி, 150 ரன்களைக் கடந்தார்.

இதன்மூலம் அதிகமுறை 150 ரன்கள் எடுத்த கேப்டன்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் சாதனையை முறியடித்தார். அதையடுத்து 7ஆவது முறையாக இரட்டை சதம் விளாசிய விராட் கோலி, இந்திய வீரர்களில் அதிக இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன்னதாக சேவாக் இந்த சாதனையை படைத்திருந்தார். தற்போது சேவாக் சாதனையை கோலி முறியடித்துள்ளார்.

அதோடு சேர்த்து டெஸ்ட் போட்டிகளில் 7000 ரன்களை கடந்து சாதனை புரிந்துள்ளார். அதையடுத்து முதன்முறையாக 254 ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்முறையாக 250 ரன்களைக் கடந்துள்ளார். இதன்மூலம் 250 ரன்களைக் கடந்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையையும், டெஸ்ட் போட்டிகளில் தனது அதிகபட்ச ரன்களான 243 ரன்களையும் கடந்து பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். அதேபோல் சர்வதேச போட்டிகளில் 21 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் ஸ்டீவ் ஸ்மித் - விராட் கோலி இருவருக்குமான ஒப்பீடு சமூகவலைத்தளங்களில் அதிகமாகியுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரர் ஸ்டீவ் ஸ்மித்? அல்லது விராட் கோலி? இருவர் யார் என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்களிடயே மீண்டும் எழுந்துள்ளது. மேலும் இந்த போட்டியில் விராட் கோலி படைத்த சாதனைகளை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே: கோலி சிறந்தவர் தான்; ஆனால் ஸ்மித்தின் சாதனை பேசுகிறது - கங்குலி அதிரடி!

Intro:Body:

Ind Vs Rsa match update

Conclusion:
Last Updated : Oct 13, 2019, 1:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.