ETV Bharat / sports

கடந்த 10 ஆண்டுகளில் மனதுக்கு நெருக்கமான தருணங்களை பகிர்ந்த கோலி... - கோலி ஐசிசி விருது

இந்தியாவுக்காக விளையாடும் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது என ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்ற விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Virat Kohli
Virat Kohli
author img

By

Published : Dec 28, 2020, 7:48 PM IST

Updated : Dec 28, 2020, 7:59 PM IST

ஐசிசியின் கடந்த பத்தாண்டுகளில் சிறந்து விளங்கிய வீரருக்கான விருது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த விருதும் கோலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரத்துக்கும் மேல் ரன்களை கோலி குவித்துள்ளார். இதில் 39 சதங்கள், 48 அரை சதங்கள் அடங்கும். வீரராக களத்தில் இருந்து 112 கேட்ச்சுகளை கோலி பிடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் பேட்டிங் சராசரியாக 61.89 வைத்திருக்கிறார்.

ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து பேசிய விராட் கோலி, எனக்கு இந்தியாவுக்காக விளையாடும் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது. நாட்டிற்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக இருக்கிறது.

என்னுடைய கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் இது. இந்த விருதை பெறுவது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.

மற்ற வீரர்கள் போல் இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நினைப்பதில்லை. என்னுடைய சிறந்த பங்களிப்பை கொடுக்கவே நான் முயற்சிக்கிறேன். கடின உழைப்பு, விடா முயற்சியுடன் அடுத்த 10 ஆண்டுகளை தொடர முயற்சிக்கிறேன். அதேபோல் பிட்னஸ் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் கவனமுடன் இருக்க விரும்புகிறேன்.

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. 2013ஆம் ஆண்டு சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது என இந்த மூன்றும் கடந்த 10 ஆண்டுகளில் என் மனதுக்கு நெருக்கமான தருணங்கள் ஆகும் என்றார்.

இதையும் படிங்க:சிறந்த வீரருக்கான விருது கோலிக்கு, 'ஐசிசி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்' தோனிக்கு!

Last Updated : Dec 28, 2020, 7:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.