ETV Bharat / sports

கோலி - ரோகித் ஷர்மா இடையே மற்றொரு போட்டி; வெல்லப்போவது யார்? - Virat Kohli, Rohit Sharma

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனை படைக்க இந்திய அணியின் கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோகித் ஷர்மா இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கோலி - ரோகித் இடையே மற்றொரு போட்டி; வெல்லப்போவது யார்
author img

By

Published : Aug 3, 2019, 5:00 PM IST

இந்திய அணியின் கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோகித் ஷர்மா இருவரும் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்கின்றனர். இவர்கள் களத்தில் ஜோடி சேர்ந்தால் ரன் மழை பொழிவதோடு மட்டுமின்றி பல்வேறு சாதனைகளைப் படைப்பதும் இவர்களுக்கு கைவந்த கலை.

தற்போது இருவருக்கும் தங்களின் ஆட்டத்திறனை வெளிப்படுத்தும் வகையில் சுவாரஸ்யமான போட்டி ஒன்று நிலவுகிறது. சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அரைசதம் அடித்த வீரர்களுக்கான பட்டியலில், கோலி, ரோகித் ஷர்மா இருவரும் (20) முதலிடத்தில் உள்ளனர். இதனால், இன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் டி20 போட்டியில் இவர்களில் எந்த வீரர் அரைசதம் அடித்து புதிய சாதனைப் படைப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Virat Kohli, Rohit Sharma
ரோகித் ஷர்மா - கோலி

சமீபகாலமாக இருவருக்குள் பிரச்னைகள் இருப்பதாக செய்திகள் வெளிவரும் நிலையில், இந்த ஆரோக்கியமான போட்டி அதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக அரை சதம் அடித்த வீரர்கள்

  1. கோலி/ரோகித் ஷர்மா (இந்தியா) - 20
  2. மார்டின் கப்தில் (நியூசிலாந்து) - 16
  3. கிறிஸ் கெயில் (வெஸ்ட் இண்டீஸ்) / மெக்கல்லம் (நியூசிலாந்து) - 15

Intro:Body:

Other Sports

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.