ETV Bharat / sports

'மூன்று வருடங்களுக்குப் பின் ஓய்வு குறித்து பேசலாம்' - கோலி - Ind vs Nz

வெல்லிங்டன்: அடுத்த மூன்று வருடங்களுக்கு இதே உத்வேகத்துடன் விளையாடுவேன் என்றும் அதன்பின் ஓய்வு குறித்து பேசுகிறேன் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

கோலி, Virat Kohli
கோலி
author img

By

Published : Feb 19, 2020, 3:00 PM IST

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இந்தப் பயணத்தில் இந்திய அணி டி20 தொடரையும், நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரையும் முழுமையாக கைப்பற்றின. தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் வெல்லிங்டனில் தொடங்குகிறது.

இதனிடையே இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கோலி, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கவுள்ள பிரித்வி ஷா, மயாங்க் அகர்வால் குறித்து பேசினார். கோலி பேசுகையில், ”பிரித்வி திறமை வாய்ந்த வீரர் என்பதால் அவர் அவருடைய இயல்பான ஆட்டத்தை விளையாட வேண்டும். மயாங்க் ஆஸ்திரேலியாவில் விளையாடியதைப் போன்று இம்முறையும் விளையாடுவார். பிரித்வி ஷாவும் அதை நியூசிலாந்தில் செய்வார் என்று நம்புகிறேன்.

பிரித்வி ஷாவிற்கு அனுபவம் இல்லை என்று நீங்கள் கூறலாம். ஆனால் மயாங்க் அகர்வாலை அவ்வாறு கூறிவிட முடியாது. ஏனெனில் அவர் கடந்த வருடம் மிகச் சிறப்பாக விளையாடி ரன்களையும் குவித்தார். இதன்மூலம் அவரது ஆட்டம் டெஸ்ட் போட்டிக்கான சரியான ஆட்டம்.

கோலி, Virat Kohli
கோலி

மேலும் ஒருநாள் போட்டிகளில் நீங்கள் அதிகமான முயற்சிகளை மேற்கொள்ளலாம். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும்போது உங்களது பேட்டிங் சரியான முறையில் அமைந்திருப்பது அவசியம். மயாங்கின் பேட்டிங் முறை அவ்வாறே உள்ளது” என்றார்.

தொடர்ந்து கோலியிடம் 2021ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைத் தொடருக்குப்பின் ஏதெனும் ஒரு ஃபார்மெட்டில் (டெஸ்ட், ஒருநாள், டி20) இருந்து ஓய்வுபெறும் எண்ணம் உள்ளதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தன்னைத் தயார்படுத்தவுள்ளதாகவும், அதன்பின்னரே அது குறித்து பேச முடியும் என்றும் கூறினார்.

மேலும் தன்னுடைய தேவை இந்திய அணிக்கு இருப்பதால், தான் தொடர்ந்து அதே உத்வேகத்துடன் விளையாடு உள்ளதாகவும் தெரிவித்தார். அப்போதுதான் தன்னால் இந்திய அணியில் எளிதான மாற்றத்தை கொண்டுவர முடியும் என்றும் அவர் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.