ETV Bharat / sports

ஒரே பதிவில் 12 ஆண்டுகால சகாப்தத்தை நினைவுகூர்ந்த கோலி! - கோலி அடித்த ரன்கள்

இன்ஸ்டாகிராம் தளத்தில் தனது ஆயிரமாவது பதிவில் 12 ஆண்டுகால சகாப்தத்தை  இந்திய அணியின் கேப்டன் கோலி நினைவுகூர்ந்துள்ளார்.

Kohli reflects on 12-year journey in international cricket in his 1000th Instagram post

author img

By

Published : Jul 23, 2020, 7:31 PM IST

தற்போதைய நவீன கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரராகத் திகழ்பவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. 2008இல் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் மூலம் அறிமுகமான இவர், இதுவரை 86 டெஸ்ட் போட்டிகளில் 7,240 ரன்களும், 248 ஒருநாள் போட்டிகளில் 11,867 ரன்களும், 82 டி20 போட்டிகளில் 2,794 ரன்களும் குவித்து ரன்மிஷினாக வலம்வருகிறார்.

வலது கை பேட்ஸ்மேனான இவர் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் இதுவரை 70 சதங்களை விளாசியுள்ளார். அதில் டெஸ்டில் 27 சதமும் ஒரு நாள் தொடரில் 43 சதமும் அடங்கும். களத்தில் மட்டுமல்லாது ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவரை, ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். குறிப்பாக, அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை 69.4 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர்.

இந்நிலையில், இன்று (ஜூலை 23) இன்ஸ்டாகிராம் தளத்தில் தனது ஆயிரமாவது (1,000th post) பதிவில், 12 ஆண்டுகால சகாப்தத்தை இந்திய அணியின் கேப்டன் கோலி நினைவுகூர்ந்துள்ளார். அதில், ’2008 முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான பயணத்தில் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். நீங்கள் எனக்குக் காட்டிய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. இது எனது ஆயிரமாவது பதிவு” என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தன்னுடைய இள வயதில் இருக்கும் புகைப்படத்தையும் தற்போதைய புகைப்படத்தையும் ஒன்றாகச் சேர்த்து பதிவிட்டுள்ளார்.

இதனிடையே கடந்த மார்ச் 12 முதல் மே 14ஆம் தேதி வரை இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருவாய் ஈட்டிய விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இவர் ஆறாவது இடத்தில் உள்ளார். இன்ஸ்டாகிராமில் நிறுவனங்கள் குறித்த விளம்பரப் படங்களைப் பதிவிட்டதன் மூலம் அவர் 3.62 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார். இப்பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம்பிடித்த ஒரே கிரிக்கெட் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.