ETV Bharat / sports

ஐபிஎல் தொடரின் அதிகாரப்பூர்வ பார்ட்னராக அன்அகாதமி தேர்வு! - ஐபிஎல் 2020

இந்தாண்டு ஐபிஎல் தொடரின் அதிகாரப்பூர்வ பார்ட்னராக கல்வி தொழில்நுட்ப நிறுவனமான அன்அகாதமி(Unacademy) செயல்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

Unacademy becomes official partner of IPL

author img

By

Published : Aug 30, 2020, 5:09 PM IST

2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக எட்டு அணிகளைச் சேர்ந்த வீரர்கள், நிர்வாகிகள் என அனைவரும் கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகம் சென்றனர்.

இந்நிலையில், 2020ஆம் ஆண்டுகான ஐபிஎல் தொடரின் அதிகாரப்பூர்வ பார்ட்னராக பிரபல கல்வி தொழில்நுட்ப நிறுவனமாக அன்அகாதமி செயல்படுமென பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் இந்த ஒப்பந்தமானது மூன்று ஐபிஎல் சீசன்களுக்கு நீடிக்கும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடரின் இந்தாண்டுக்கான டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப் உரிமத்தை ட்ரீம் 11 நிறுவனம் ரூ. 222 கோடிக்கு வாங்கியது. அதைத்தொடர்ந்து தற்போது ஐபிஎல் தொடரின் பார்ட்னராக அன்அகாதமி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் அணி ஊழியர்கள் என 13 பேருக்கு சமீபத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தாண்டு ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

இதையும் படிங்க:பிபிஇ உடையில் கேல் ரத்னா விருதைப் பெற்ற ராணி ராம்பால்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.