ETV Bharat / sports

வயது மோசடியில் ஈடுபட்ட உலகக்கோப்பை நட்சத்திரம்..! அணியிலிருந்து அதிரடியாக வெளியேற்றம்! - நித்தீஷ் ராணா

2018ஆம் ஆண்டு அண்டர் 19 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் சதமடித்த மஞ்சோத் கல்ரா, வயது மோசடியில் ஈடுபட்டதாக டெல்லி அண்டர் 23 ரஞ்சி அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

Manjot Kalra suspended
Manjot Kalra suspended
author img

By

Published : Jan 2, 2020, 7:42 AM IST

2018ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற அண்டர் 19 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதமடித்து கோப்பையை பெற்றுத் தந்தவர் மஞ்சோத் கல்ரா.

இவர் தனது அண்டர் 16 மற்றும் அண்டர் 19 நாட்களில் வயது மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததையடுத்து, டெல்லி கிரிக்கெட் வாரியம் விசாரணை மேற்கொண்டது. அந்த விசாரணையில் கல்ரா வயது மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து டிடிசிஏ மஞ்சோத் கல்ராவுக்கு ஓராண்டு கால டெல்லி அண்டர் 23 ரஞ்சி அணியில் விளையாடத் தடை விதித்துள்ளது.

அண்டர் 19 உலகக்கோப்பையில் சதமடித்த கல்ரா

இதேபோல் தற்போது டெல்லி சீனியர் ரஞ்சி அணியின் துணைக்கேப்டன் நித்தீஷ் ராணா தனது ஜுனியர் விளையாட்டு காலங்களில் வயது மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. பிறகு கூடுதல் ஆவணங்களை ராணா சமிர்பிக்க அவர் அதிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

மேலும் மற்றொரு அண்டர் 19 நட்சத்திரமான ஷிவம் மாவியின் வயது மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது. இருப்பினும் அவர் தற்போது உத்தரப் பிரதேச சீனியர் அணியில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: யூத் ஒருநாள் கிரிக்கெட்: ஆறுதல் வெற்றிபெற்ற தென் ஆப்பிரிக்கா... தொடரை வென்ற இந்தியா

Intro:Body:

U-19 World Cup hero Manjot Kalra suspended from Ranji Trophy for age fraud

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.