இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலிய ஆகிய அணிகள் பங்கேற்ற முத்தரப்பு மகளிர் டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அலைஸா ஹேலி - பெத் மூனி இணை தொடக்கம் கொடுத்தனர். அலைஸா 4 ரன்களில் வெளியேற, தொடர்ந்து ஆஷ்லி களமிறங்கினார். சிறப்பாக ஆடிய மூனி - ஆஷ்லி ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்தனர். அப்போது ஆஷ்லி அருந்ததி ரெட்டி பந்தில் ஆட்டமிழக்க, கேப்டன் லான்னிங் களமிறங்கி அதிரடியாக ஆடினார். மூன்றாவது விக்கெட்டிற்கு மூனி - லான்னிங் இணை 51 ரன்கள் சேர்த்தது. இதனிடையே மூனி அரைசதம் அடித்து அசத்தினார்.
கேப்டன் லான்னிங் 26 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி 155 ரன்களை எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக ஆடிய தொடக்க வீராங்கனை பெத் மூனி 54 பந்துகளில் 71 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க: 'தமிழனாய் வாழ்வது எனக்குப் பெருமை' - ட்விட்டரில் பதிவிட்ட இந்திய கிரிக்கெட் கேப்டன்!
பின்னர் 156 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 11 ரன்கள் சேர்த்த நிலையில் ஷஃபாலி வர்மா 10 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளிக்க, தொடர்ந்து ரிச்சா கோஷ் வந்தார். இதையடுத்து அதிரடி ரன் குவிப்பில் ஸ்மிருதி ஈடுபட, இந்திய அணி 8 ஓவர்கள் முடிவில் 54 ரன்களை எடுத்தது.
இரண்டாவது விக்கெட்டிற்கு 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரிச்சா 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ஜெமிமா 2 ரன்களில் வெளியேற, 69 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இந்திய அணி பறிகொடுத்தது.
-
Nicola Carey takes an absolute ripper to remove the dangerous Smriti Mandhana for 66!
— Australian Women's Cricket Team 🏏 (@AusWomenCricket) February 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
LIVE: https://t.co/uuOaJZTc3J #CmonAussie pic.twitter.com/CTbS81JtdW
">Nicola Carey takes an absolute ripper to remove the dangerous Smriti Mandhana for 66!
— Australian Women's Cricket Team 🏏 (@AusWomenCricket) February 12, 2020
LIVE: https://t.co/uuOaJZTc3J #CmonAussie pic.twitter.com/CTbS81JtdWNicola Carey takes an absolute ripper to remove the dangerous Smriti Mandhana for 66!
— Australian Women's Cricket Team 🏏 (@AusWomenCricket) February 12, 2020
LIVE: https://t.co/uuOaJZTc3J #CmonAussie pic.twitter.com/CTbS81JtdW
ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி ரன் ரேட்டை கட்டுக்குள் வைத்துக்கொண்டார். இவர் 29 பந்துகளில் பவுண்டரி அடித்து தனது அரைசதத்தை அடிக்க, கேப்டன் ஹர்மன்ப்ரீத் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 14 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 111 ரன்களை எடுத்தது. இந்திய அணி 34 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஸ்மிருதி மந்தனா 37 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்ததால் ஆட்டம் பரபரப்பானது.
தொடர்ந்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 14 ரன்களிலும் அருந்ததி ரெட்டி ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேற, ஆஸ்திரெலியாவின் கை ஓங்கியது. பின்னர் வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேற 19 ஓவர்களில் இந்திய அணி 141 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி ஓவரில் வெற்றிபெற 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் இந்திய அணி பறிகொடுத்தது. இறுதியாக 20 ஓவர்களில் 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்ததுடன் கோப்பையையும் பறிகொடுத்தது.
-
🏆 WINNERS 🏆#CmonAussie pic.twitter.com/xr141bjRFC
— Australian Women's Cricket Team 🏏 (@AusWomenCricket) February 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">🏆 WINNERS 🏆#CmonAussie pic.twitter.com/xr141bjRFC
— Australian Women's Cricket Team 🏏 (@AusWomenCricket) February 12, 2020🏆 WINNERS 🏆#CmonAussie pic.twitter.com/xr141bjRFC
— Australian Women's Cricket Team 🏏 (@AusWomenCricket) February 12, 2020
இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜெஸ் ஜோனஸன் ஆட்டநாயகியாகவும், பெத் மூனி தொடர் நாயகியாகவும் அறிவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: இந்த தசாப்தத்தில் பெண்கள் கிரிக்கெட்டின் நிலை!