விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், சங்கர் சிமெண்ட் நடத்தும் மாவட்ட அளவிலான டி.என்.பில்.எல் டி-20 கிரிக்கெட் தொடர் லீக் போட்டி, ஜுலை 19ஆம் தேதி திண்டுக்கல்லில் தொடங்குகிறது.
8 அணிகள் பங்கேற்க உள்ள இந்த தொடரின் 28 லீக் போட்டிகள் திண்டுக்கல், திருநெல்வேலி, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன. ஆகஸ்ட் 11ஆம் தேதி கால் இறுதிப் போட்டியும், ஆகஸ்ட் 13ல் அரையிறுதிப் போட்டியும் நடைபெறுகிறது. இறுதிப் போட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
டி-20 கிரிக்கெட் தொடர்பாக ரஞ்சி கிரிக்கெட் வீரர் அருண் கார்த்திக் கூறுகையில், "மாவட்ட அளவில் சாதனை புரிந்த கிரிக்கெட் வீரர்களுக்கு டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். இந்த தொடரில் போட்டியிடும் வீரர்கள் தேர்வு நேர்மையாக நடைபெற்றது. இதில் எந்தவொரு முறைகேடும் நடைபெறவில்லை", எனக் கூறினார்.