இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் லீக் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத்தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணியில் ஆதித்யா டாரே, சூர்ய குமார் யாதவ் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினர். பின்னர் களமிறங்கிய ஷாம்ஸ் முலானி அதிரடியாக விளையாடி அரைசதமடித்து அசத்தினார்.
இதன் மூலம் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை எடுத்தது. தமிழ்நாடு அணி சார்பில் சித்தார்த் நான்கு விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய தமிழ்நாடு அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் ஷாருக் கான் மற்றும் ஹரி நிஷாந்த் அதிரடியான தொடக்கத்தை தந்தனர். இதில் 17ரன்கள் அடித்திருந்த நிலையில் ஷாருக் கான் வெளியேற,பின்னர் வந்த அபரஜித், தினேஷ் கார்திக் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.
-
TN bounce back with a victory in their second Super League encounter!
— TNCA (@TNCACricket) November 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Hari Nishaanth (73*) & Vijay Shankar (27*) share a 73-run stand and guide TN to a win over Mumbai as they chase the target in 13.5 overs. #TNvMUM #SyedMushtaqAliTrophy pic.twitter.com/dkJcOOMDvb
">TN bounce back with a victory in their second Super League encounter!
— TNCA (@TNCACricket) November 22, 2019
Hari Nishaanth (73*) & Vijay Shankar (27*) share a 73-run stand and guide TN to a win over Mumbai as they chase the target in 13.5 overs. #TNvMUM #SyedMushtaqAliTrophy pic.twitter.com/dkJcOOMDvbTN bounce back with a victory in their second Super League encounter!
— TNCA (@TNCACricket) November 22, 2019
Hari Nishaanth (73*) & Vijay Shankar (27*) share a 73-run stand and guide TN to a win over Mumbai as they chase the target in 13.5 overs. #TNvMUM #SyedMushtaqAliTrophy pic.twitter.com/dkJcOOMDvb
மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஹரி நிஷாந்த் அரைசதம் விளாசினார். இதன் மூலம் தமிழ்நாடு அணி 13.5 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அடைந்தது, ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. அதிரடியாக விளையாடி 73 ரன்களை சேர்த்த ஹரி நிஷாந்த் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: புதிய சாதனை படைத்த இஷாந்துக்கு ட்விட்டரில் குவியும் வாழ்த்துகள்!