ETV Bharat / sports

தன்னை கேலி செய்த ஐசிசியை விளாசிய அக்தர்! - ஐசிசியை விளாசிய அக்தர்

தன்னை கேலி செய்து ட்வீட் செய்த ஐசிசிக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் தக்க பதிலடி தந்துள்ளார்.

Thrown neutrality out of window: Akhtar slams ICC

author img

By

Published : May 15, 2020, 12:15 AM IST

பிரபல இஎஸ்பியன் கிரிக் இன்ஃபோ கிரிக்கெட் இணையதளம் தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த கால ஜாம்பவான்கள், தற்போதைய சிறந்த வீரர்கள் என 10 ஜோடிகளின் புகைப்படத்தை வெளியிட்டது.

அதில், கோலி vs வார்னே, பாபர் அசாம் vs மெக்ராத், சயத் அன்வர் vs பும்ரா, கெவின் பீட்டர்சன் vs ரபாடா, கேன் வில்லியம்சன் vs முரளிதரண், ரிக்கி பாண்டிங் vs ஆர்ச்சர், ஸ்டீவ் ஸ்மித் vs அக்தர், லாரா vs வாக்னர், சச்சின் vs ரஷித்கான், டி வில்லியர்ஸ் vs அக்ரம் என இந்த 10 ஜோடிகளில் யாரது சவால்களைப் பார்க்க உங்களுக்கு ஆர்வமாக இருக்கிறது என்ற கேள்வியைக் கேட்டது.

Thrown neutrality out of window: Akhtar slams ICC
அக்தரின் பதில்

இந்தப் புகைப்படத்தை பார்த்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர், மூன்று பவுன்சர் பந்துகளால் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித்தை தாக்கிய பின்னர் நான்காவது பந்தில் நான் அவரை அவுட் செய்துவிடுவேன் என பதிலளித்தார். இதையடுத்து, அக்தரின் இந்த ட்வீட்டை கேலி செய்யும் விதமாக ஐசிசி பிரபல கூடைப்பந்து வீரர் மைக்கல் ஜோர்டன் சிரிக்கும் புகைப்படத்தை வெளியிட்டது.

  • A symbolic tweet, how ICC has thrown neutrality out of the window.
    Basically this is how the state of affairs are run there :) https://t.co/OEoJx30lXt

    — Shoaib Akhtar (@shoaib100mph) May 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில், தன்னைக் கலாய்த்த ஐசிசிக்கு அக்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் தக்க பதிலடி தந்துள்ளார். தனது பதவில் அவர், ஐசிசியின் நடுநிலை எப்படி இருக்கிறது என்பதை இந்த ட்வீட் விவரிக்கிறது என பதிவிட்டிருந்தார். மேலும் தனது அடுத்த பதிவில் அவர், இதற்கு பதிலளிக்க எனக்கு சரியான எமோஜிக்கள் அல்லது மீம் கிடைக்கவில்லை என்பதால் ஒரு சிறிய நிஜ வீடியோவை வெளியிடுகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

அதில் அக்தரின் பவுன்சர் பந்துகளாலும், யார்க்கர் பந்துகளாலும் நிலைகுலைந்த பேட்ஸ்மேன்களின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அக்தரின் பவுன்சர் பந்துகளால் 19 பேர் ரிடயர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சேவாக் சொல்ற மாதிரியான சம்பவம் நடக்கவே இல்ல - அக்தர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.