ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் டி10 லீக் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று ஷேன் வாட்சன் தலைமையிலான டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி எலிமினேட்டர் மற்றும் குவாலிஃபையர் ஆட்டங்களில் பங்கேற்றது.
டி10 லீக்கின் எலிமினேட்டர் சுற்றில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி, திசாரா பெரேரா தலைமையிலான பங்களா அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் டாஸ் வென்ற டெக்கான் அணி பந்துவீச்சைத் தேர்வு செயதது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய பங்களா அணி, ரோஸ்ஸோவின் அதிரடியால் 10 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை எடுத்தது. சிறப்பாக விளையாடிய ரோஸ்ஸோ 55 ரன்களை விளாசினார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய டெக்கான் அணி லாரன்ஸ் அதிரடியால் 9.1 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அடைந்து டி10 லீக்கின் குவாலிஃபையர்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. இதில் சிறப்பாக விளையாடிய லாரன்ஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
-
Yet another thriller! Congratulations Deccan Gladiators. Welcome to the Eliminator 2. Thank you Bangla Tigers for the brilliant show!#AbuDhabiT10 #t10league #t10season3 #inabudhabi #AldarProperties #deccangladiators #banglatigers pic.twitter.com/Z6yPFgE19o
— T10 League (@T10League) November 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Yet another thriller! Congratulations Deccan Gladiators. Welcome to the Eliminator 2. Thank you Bangla Tigers for the brilliant show!#AbuDhabiT10 #t10league #t10season3 #inabudhabi #AldarProperties #deccangladiators #banglatigers pic.twitter.com/Z6yPFgE19o
— T10 League (@T10League) November 23, 2019Yet another thriller! Congratulations Deccan Gladiators. Welcome to the Eliminator 2. Thank you Bangla Tigers for the brilliant show!#AbuDhabiT10 #t10league #t10season3 #inabudhabi #AldarProperties #deccangladiators #banglatigers pic.twitter.com/Z6yPFgE19o
— T10 League (@T10League) November 23, 2019
பின் நேற்று இரவு தொடங்கிய குவாலிஃபையர்ஸ் ஆட்டத்தின் டெக்கான் அணி, டேவிட் மாலன் தலைமையிலான கலந்தர்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெக்கான் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய டெக்கான் அணிக்கு பென் கட்டிங் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோர் கணக்கை உயர்த்தினார். இதன் மூலம் டெக்கான் அணி 10 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 116 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் கட்டிங் 19 பந்துகளில் 43 ரன்களை விளாசினார்.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய கலந்தர்ஸ் அணி, டெக்கான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வந்தது. இதனால் கலந்தர்ஸ் அணி 10 ஓவர்களில் 104 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் டெக்கான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் கலந்தர்ஸ் அணியை வீழ்த்தி டி10 லீக்கின் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது.
-
The real @TeamDGladiators, you are the winners. See you in the Finals🏏🏏The @QalandarsT10 , you are the real fighters 👏👏#AbuDhabiT10 #t10league #t10season3 #inabudhabi #AldarProperties #deccangladiators #qalandars pic.twitter.com/b4R78WShkw
— T10 League (@T10League) November 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The real @TeamDGladiators, you are the winners. See you in the Finals🏏🏏The @QalandarsT10 , you are the real fighters 👏👏#AbuDhabiT10 #t10league #t10season3 #inabudhabi #AldarProperties #deccangladiators #qalandars pic.twitter.com/b4R78WShkw
— T10 League (@T10League) November 23, 2019The real @TeamDGladiators, you are the winners. See you in the Finals🏏🏏The @QalandarsT10 , you are the real fighters 👏👏#AbuDhabiT10 #t10league #t10season3 #inabudhabi #AldarProperties #deccangladiators #qalandars pic.twitter.com/b4R78WShkw
— T10 League (@T10League) November 23, 2019
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பென் கட்டிங் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் டெக்கான் அணி இன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் மராத்தா அரபியன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இரட்டை சதமடித்து அசத்திய வாட்லிங்..! சதமடித்து மிரட்டிய சாண்ட்னர்!