இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி மூன்று டி20, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. உலகக்கோப்பை தொடருக்குப்பின் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் ஃபாப் டூ பிளெசிஸ் காயம் காரணமாக தொடரிலிருந்து விளகியுள்ளதால் அந்த அணியை விக்கெட் கீப்பரான குவிண்டன் டி காக் தலைமை தாங்குவார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
இந்நிலையில் 15ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டி மழையினால் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று இந்திய - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி மொஹாலியிலுள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் மைதானத்தில் விளையாடவுள்ளது.
பெறும் எதிர்பார்ப்புகளிடையே நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ஹர்த்திக் பாண்டியா போன்ற இளம்படையோடு இந்திய அணி களமிறங்குகிறது. அதேசமயம் உலகக்கோப்பையின் மோசமான தோல்விக்குப் பின் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற மனநிலையில் தென்னாப்பிரிக்க அணி இன்றைய போட்டியில் களம்காண்கிறது.
உத்தேச அணி விவரம்:
இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கே), ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த், ஹர்திக் பாண்டியா, குர்ணல் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், தீபக் சஹார், நவ்தீப் சைனி.
தென்னாப்பிரிக்கா: குயின்டன் டி காக் (கே), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரஸ்ஸி வான்டெர் டௌசன், டெம்பா பவுமா, டேவிட் மில்லர், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, டுவைன் பிரிட்டோரியஸ், காகிசோ ரபாடா, பியூரன் ஹென்ட்ரிக்ஸ், ஜூனியர் தலா, அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்ஸி.