கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இந்த திடீர் ஊரடங்கு உத்தரவால் தினக்கூலிகள், சிறு, குறு தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஒருபக்கம் உதவுக்கரம் நீட்டினாலும், தன்னார்வு தொண்டு நிறுவனமும் தங்களால் முடிந்த நிதியுதவி அளித்துவருகிறது. இந்த நிலையில், மும்பையில் சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு Hi5 இளைஞர் அறக்கட்டளை நிதியுதவி அளித்துவருகிறது.
இந்நிலையில், மும்பை மாநகராட்சியில் உள்ள குழந்தைகள் உள்பட சமூகத்தில் பின்தங்கிய 4000 பேருக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் நிதியுதவி வழங்கியுள்ளார். அவர் அந்த அறக்கட்டளைக்கு குறிப்பிடத்தக்க தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
முன்னதாக, இவர் கரோனா எதிர்ப்புக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக மத்திய அரசுக்கு ரூ. 25 லட்சமும், மாநில அரசுக்கு ரூ. 25 லட்சமும் நிதியுதவி வழங்கினார். அதேபோல, மும்பையில் உள்ள 5000 பேருக்கு ஒரு மாத ரேஷன் பொருள்களை இலவசமாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ட்ரைவ் ஷாட் ஆடுவது எப்படி? இன்ஸ்டாவில் டிப்ஸ் வழங்கும் ஸ்டீவ் ஸ்மித்