ETV Bharat / sports

ஆடவர் அணியின் பயிற்சியாளராக மாறிய கிரிக்கெட் வீராங்கனை! - சசெக்ஸ் ஆடவர் அணி

இங்கிலாந்து மகளிர் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் வீராங்கனையாகத் திகழ்ந்த சாரா டெய்லர், கவுண்டி அணிகளும் ஒன்றான சசெக்ஸ் ஆடவர் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Taylor joins coaching staff of Sussex county's men team

author img

By

Published : Mar 16, 2021, 9:42 PM IST

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியில் அதிரடி வீராங்கனையாகத் திகழ்ந்தவர் சாரா டெய்லர். இங்கிலாந்து அணிக்காக இதுவரை 226 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 6,500 ரன்களைக் குவித்துள்ளார். இதில் ஏழு சதங்கள், 36 அரைசதங்களும் அடங்கும்.

மேலும் விக்கெட் கீப்பிங் முறையில் 232 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீராங்கனை என்னும் பெருமையையும் பெற்றார்.

தற்போது 31 வயதாகும் சாரா டெய்லர், 2019ஆம் ஆண்டு உளவியல் பிரச்சினைகள் காரணமாக கிரிக்கெட்டிலிருந்து திடீரென விலகுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

இந்நிலையில், இங்கிலாந்தின் மிகப்பிரபலமான உள்ளூர் கிரிக்கெட் தொடரான கவுண்டியின் சசெக்ஸ் ஆடவர் அணியின் பயிற்சியாளராக சாரா டெய்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • "We have a really talented group of keepers at Sussex. I want to share my experience and expertise to help them get the most out of their game." 🗣️💬@Sarah_Taylor30 is "really pleased" to have joined the club's coaching staff for the forthcoming season:

    — Sussex Cricket (@SussexCCC) March 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது குறித்து சசெக்ஸ் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சசெக்ஸ் கிரிக்கெட் சங்கம் வரவுள்ள சீசனில் அணியின் பயிற்சியாளர்களாக சாரா டெய்லர், ஆஷ்லே ரைட் ஆகியோரை நியமித்திருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது" எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மார்க் வுட் வேகத்தில் சரிந்த இந்தியா, தனி ஒருவனாக அணியைத் தூக்கி நிறுத்திய கோலி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.