தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், டெஸ்ட் தொரை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணியும், ஒருநாள் தொடரை 5-0 என்ற வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியும் கோப்பையைக் கைப்பற்றியது.
இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி தென்னாப்பிரிக்காவின் துல்லியமான பந்துவீச்சினால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மெண்டிஸ் 41 ரன்களை விளாசினார்.
இதைத்தொடர்ந்து, 135 ரன் இலக்குடன் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 19 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை எடுத்தது. இதனால், ஆட்டத்தின் கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு ஐந்து ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த அணியின் நட்சத்திர வீரர் டுமினி, ரபாடா ஆகியோர் களத்தில் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து, இலங்கை அணியின் பந்துவீச்சாளர் உதானா வீசிய கடைசி ஓவரின் முதல் நான்கு பந்துகளில் இரண்டு ரன்களை மட்டுமே வழங்கினார். இதனால், கடைசி இரண்டு பந்துகளில் மூன்று ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தென்னாப்பிரிக்கா வீரர் டுமினி இரண்டாவது ரன் ஒடும் போது ரன் அவுட் ஆனார்.
பின்னர், கடைசி பந்தை பேட்டில் அடிக்காமல் மிஸ் செய்தாலும் தென்னாப்பிரிக்கா அணியின் சுழற்பந்துவீச்சாளர் தாஹிர் லாவகமாக ஒரு ரன் எடுத்தார். அவரை ரன் அவுட் செய்யும் வாய்ப்பை இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் டிக்வேலா நழுவ விட்டார். இதனால் ஆட்டம் டையில் முடிந்தது.
இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்கும் விதமாக சூப்பர் ஓவர் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி ஆறு பந்துகளில் 14 ரன்களை விளாசினர்.
இதைத்தொடர்ந்து, 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிர்பந்தத்துடன் ஆடிய இலங்கை அணியில் திசாரா பெரேரா, அவினாஷ் பெஃர்னாண்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்.
தென்னாப்பிரிக்கா சார்பில் பந்துவீசுவதற்கு இம்ரான் தாஹிரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதை சிறப்பாக பயன்படுத்திய அவர் இரண்டு ஓயிட் பந்துகளை உட்பட தனது ஓவரில் ஐந்து ரன்களை (1,0,0,1,ஓயிட்,0, ஓயிட், 1) மட்டுமே வழங்கினார். இதனால், தென்னாப்பிரிக்கா அணி ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் ஓவர் முறையில் இலங்கை அணியை வீழ்த்தியது.
Wide ball and Tahir bowls a dot and immediately start celebrating but the next ball is ALSO A WIDE!!
— Cricket South Africa (@OfficialCSA) March 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
In the end, South Africa win the match by 9 runs in the #SuperOver and go 1-0 up in the three-match series. #ProteaFire #SAvSL pic.twitter.com/lVbb1OMhde
">Wide ball and Tahir bowls a dot and immediately start celebrating but the next ball is ALSO A WIDE!!
— Cricket South Africa (@OfficialCSA) March 19, 2019
In the end, South Africa win the match by 9 runs in the #SuperOver and go 1-0 up in the three-match series. #ProteaFire #SAvSL pic.twitter.com/lVbb1OMhdeWide ball and Tahir bowls a dot and immediately start celebrating but the next ball is ALSO A WIDE!!
— Cricket South Africa (@OfficialCSA) March 19, 2019
In the end, South Africa win the match by 9 runs in the #SuperOver and go 1-0 up in the three-match series. #ProteaFire #SAvSL pic.twitter.com/lVbb1OMhde
இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி மார்ச் 22ஆம் தேதி செஞ்சுரியனில் நடைபெறவுள்ளது.