ETV Bharat / sports

இந்திய மகளிருக்கு வாழ்த்துகளைக் கூறும் இந்திய ஆடவர் அணி! - விராட் கோலி

மகளிருக்கான டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய மகளிர் அணி முதல்முறையாக முன்னேறியுள்ள நிலையில், இந்திய ஆடவர் அணி வீரர்கள் வாழ்த்துகளைப் பதிவிட்டுவருகின்றனர்.

t20-wc-kohli-congratulates-indian-womens-team-on-reaching-final

author img

By

Published : Mar 5, 2020, 1:42 PM IST

ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் மகளிருக்கான டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவிருந்தன. ஆனால் மழை காரணமாக இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் ரத்துசெய்யப்பட்டது. இதனால் குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

டி20 உலகக்கோப்பைத் தொடரில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு இந்திய மகளிர் அணி முன்னேறியுள்ளது. இதற்கு இந்திய ஆடவர் அணியின் முன்னாள், இந்நாள் வீரர்கள் பலரும் வாழ்த்துகளை ட்விட்டரில் கூறிவருகின்றனர்.

அதில் இந்திய ஆடவர் அணி கேப்டன் விராட் கோலி, ''டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துகள். உங்களால் பெருமைகொள்கிறோம். இறுதிப்போட்டியில் வெற்றிபெற எனது வாழ்த்துகள்'' எனப் பதிவிட்டுள்ளார்.

விராட் கோலி ட்வீட்
விராட் கோலி ட்வீட்

இதேபோல் இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண், ''இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நமது அணிக்கு எனது வாழ்த்துகள். இந்தத் தொடரின் தொடக்கம் முதல் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றதற்காகச் சரியான ஊதியம் கிடைத்துள்ளது. இறுதிப்போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்'' எனப் பதிவிட்டுள்ளார்.

விவிஎஸ் லக்‌ஷ்மண் ட்வீட்
விவிஎஸ் லக்‌ஷ்மண் ட்வீட்

ஐசிசியின் விதிமுறைப்படி இரு அணிகளும் ஐந்து ஓவர்கள் போட்டியிலாவது ஆடியிருக்க வேண்டும். ஆனால் ஐசிசி தொடர்களில் குறைந்தது இரு அணிகளும் 10 ஓவர்கள் ஆட வேண்டும் என்ற விதி உள்ளதால் ஆட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியும் மழையால் ரத்துசெய்யப்பட்டால் குரூப் பி பிரிவில் முதலிடம் பிடித்த தென் ஆப்பிரிக்க அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'சிஎஸ்கேவில் தான் அனைத்தையும் கற்றேன்' : 'தல' தோனி உருக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.