இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஜனவரி 15ஆம் தேதி பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது. முன்னதாக நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றியடைந்து டெஸ்ட் தொடரில் சமநிலையில் உள்ளன.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா காயமடைந்தார். இதன் காரணமாக அவர் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசவில்லை.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜடேஜாவுக்கு இன்று (ஜனவரி 12) அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜடேஜா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “அறுவை சிகிச்சை முடிந்தது. இதனால் என்னால் சிறிது காலம் விளையாட முடியாது. ஆனால் விரைவில் நான் களமிறங்குவேன்” என்று பதிவிட்டுள்ளார்.
-
Out of action for a https://t.co/ouz0ilet9j completed. But will soon return with a bang!💪🏻 pic.twitter.com/Uh3zQk7Srn
— Ravindrasinh jadeja (@imjadeja) January 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Out of action for a https://t.co/ouz0ilet9j completed. But will soon return with a bang!💪🏻 pic.twitter.com/Uh3zQk7Srn
— Ravindrasinh jadeja (@imjadeja) January 12, 2021Out of action for a https://t.co/ouz0ilet9j completed. But will soon return with a bang!💪🏻 pic.twitter.com/Uh3zQk7Srn
— Ravindrasinh jadeja (@imjadeja) January 12, 2021
மேலும் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுடனான நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரிஸ்பேன் டெஸ்ட்டிலிருந்து விலகினார் ஜடேஜா!