ETV Bharat / sports

இந்திய அணிக்காக அனைத்து கடினமான பணிகளையும் செய்தவர் ரெய்னா: டிராவிட் புகழாரம் - ரெய்னா ஓய்வு

இந்திய அணிக்காக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், ஃபீல்டிங் என அனைத்து கடினமான பணிகளையும் சுரேஷ் ரெய்னா மேற்கொண்டவர் என முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் புகழாரம் சூட்டியுள்ளார்.

suresh-raina-did-all-the-difficult-things-playing-for-india-dravid

author img

By

Published : Aug 18, 2020, 7:47 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் கரிஸ்மேட்டிக் வீரர் சுரேஷ் ரெய்னா. இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையிலான போட்டிகளில் சதம் விளாசிய முதல் வீரர். இவர் சுதந்திர தினத்தன்று முன்னாள் கேப்டன் தோனியுடன் சேர்ந்து ஓய்வை அறிவித்தார்.

இவர்களின் ஓய்வு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. அதிலும் ரெய்னாவின் ஓய்வு பலருக்கும் ஆச்சரியத்தையும் அளித்தது. இந்நிலையில் ஓய்வை அறிவித்த ரெய்னாவுக்கு ரசிகர்களும், முன்னாள் இந்நாள் வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரெய்னாவின் கிரிக்கெட் வாழ்க்கைப் பற்றி முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பேசியுள்ளார். அதில், '' 2004, 2005ஆம் ஆண்டில் வந்த வீரர்களில் மிகவும் ஆச்சரியமளித்தவர் ரெய்னா. யு-19 கிரிக்கெட்டின்போது மிகச்சிறப்பாக செயல்பட்டவர். ஒரு கட்டத்தில் அணியின் மிகமுக்கிய வீரராக சுரேஷ் ரெய்னா அதை தான் கடந்த 15 ஆண்டுகளாக செய்து வந்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி பெற்ற அனைத்து முக்கிய வெற்றிகளுக்கும் ரெய்னா முக்கிய காரணமாக இருந்துள்ளார். உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் ரெய்னாவின் பங்கு அளப்பறியது.

ரெய்னா
ரெய்னா

எப்போதும் இந்திய அணிக்காக கடினமான பணிகளை எல்லாம் மேற்கொண்டவர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்திருந்தால் ரெய்னாவின் ரன்கள் இன்னும் அதிகமாக இருந்திருக்கும். அதை சென்னை அணிக்காக ஆடும்போது நிரூபித்துள்ளார்.

டவுன் ஆர்டர் பேட்ஸ்மேன், கடினமான இடங்களில் ஃபீல்டிங், சில முக்கிய ஓவர்கள் வீசும் பந்துவீச்சாளர் என சிறந்த அணி வீரர் ரெய்னா'' என தெரிவித்துள்ளார்.

2005ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான தொடரின்போது ராகுல் கேப்டன்சியில்தான் ரெய்னா அறிமுகமானார்.

டிராவிட்
டிராவிட்

டிராவிட்டின் வீடியோவுக்கு பதிலளித்துள்ள ரெய்னா, '' என்னை பற்றி உங்களின் வார்த்தைகளுக்கு நன்றி ராகுல் பாய். நீங்கள்தான் எனது சிறுவயது இன்ஸ்பிரேஷன். உங்களின் வழிகாட்டுதலின் கீழ் என் கிரிக்கெட் பயணம் அமைய வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறியது. உங்கள் தலைமையில் எனது முதல் ஒருநாள் போட்டிக்கான அறிமுகம், டெஸ்ட் கேப் வாங்கிய நிமிடங்கள் என் வாழ்வில் மறக்க முடியாதவை. இந்த நாளை உங்கள் செய்தி முழுமையாக்கியுள்ளது'' என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்பை கைப்பற்றியது ட்ரீம் 11!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.