ஐபிஎல் தொடருக்கு பின் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. 2018-19ஆம் ஆண்டைப் போலவே இம்முறையும் கோப்பையை வெல்ல இந்திய அணி சிறப்பாக ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை சென்ற அதே அணியே இம்முறையும் பயணிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி பற்றி ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.
அதில், ''இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பொறுமை, திறமை, சமநிலை என எதைக் கணக்கில் கொண்டாலும் தற்போது விராட் கோலி தலைமை தாங்கி வரும் இந்திய அணியே மிகச்சிறந்த அணி. இதைவிடவும் நல்ல அணியை சிந்திக்கவே முடியவில்லை. அந்த அளவிற்கு அணி சிறப்பாக உள்ளது.
பேட்டிங்கைப் பொறுத்தவரை 1980களில் இருந்த அணியுடன் இந்த அணி ஒத்துபோகிறது. ஆனால் பந்துவீச்சில் தான் பெரும் மாற்றம் உள்ளது. தட்ப வெட்ப நிலை எல்லாம் கடந்தும், நம்முடைய பந்துவீச்சாளர்களால் எந்த பிட்ச்சிலும் வெற்றிபெற முடியும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றவில்லை என்றால் வெற்றிபெற முடியாது.
அதற்கேற்ப நமது பந்துவீச்சாளர்கள் செயல்பட்டுள்ளார்கள். பும்ரா, ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார் என வித்தியாசமாக வீசும் பந்துவீச்சாளர்கள் உள்ளது பெரும் சாதகம்.
ஆனால் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றியும் நாம் தோல்வியடைந்தோம். ஏனென்றால் நமது பேட்ஸ்மேன்கள் சொதப்பினார்கள். ஆனால் இப்போதை இந்திய பேட்ஸ்மேன்களால் ஆஸ்திரேலியர்களை விடவும் நன்றாக ஆடமுடியும்'' என்றார்.
இதையும் படிங்க: யூரோபா லீக்: ஆறாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது செவில்லா!