சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சாதனை புரிந்த பிரபல தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு மதுரையில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான சேன் வாட்சன் கலந்துகொண்டார். மேலும் அவர் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சாதனை புரிந்த பிரபல தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியும் பாராட்டினார்.
பின்னர் அங்குள்ள மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்த வாட்சனிடம், ‘வெற்றி தோல்வியை எப்படி கையாள்வது?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘போட்டியில் வெற்றியோ தோல்வியோ அதனை எப்படிக் கையாள்வது என்று இந்திய கிரிக்கெட் வீரர் தோனியிடம் இருந்து, அவரைப் பார்த்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்றார். மேலும் கிரிக்கெட் விளையாட்டில் எனக்கு மிகவும் பிடித்த வீரர் என்றால் அது தோனிதான் எனவும் வாட்சன் கூறினார்.
இதையும் படிங்க: தோனிக்கு இன்னும் வயசாகல...! - வாட்சன்