ETV Bharat / sports

சரி சரி அழாத - கில்கிறிஸ்ட்டை விமர்சித்த ஹர்பஜன் சிங் - ஹர்பஜன் சிங் ட்வீட்

தனது ஹாட்ரிக் குறித்து விமர்சித்த ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட்டுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

Harbhajan Singh
author img

By

Published : Sep 4, 2019, 10:13 PM IST

142 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 2000க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 2001 கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டி, டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த போட்டிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Harbhajan Singh
2001 கொல்கத்தா டெஸ்ட் வெற்றி

ஏனெனில், இந்திய அணி அப்போட்டியில் ஃபாலோ ஆன் பெற்று 171 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இப்போட்டியில் லகஷ்மன் 281, டிராவிட் 180 ரன்கள் என பேட்டிங்கில் கைகொடுக்க, பந்துவீச்சில் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர் கைப்பற்றும் முதல் ஹாட்ரிக் அது...

அவரது பந்துவீச்சில் ஆஸ்திரேலிய வீரர்களான ரிக்கி பாண்டிங், கில்கிறிஸ்ட், ஷேன் வார்னே ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்த நிலையில், அவர் ஹாட்ரிக் விக்கெட்டை எடுத்த வீடியோவை ரசிகர் ஒருவர் ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார். இதை பார்த்த கில்கிறிஸ்ட், ரிவ்யூ எடுக்கும் முறை அப்போது இல்லை என சோக ஸ்மைலியை பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், கில்கிறிஸ்ட்டை விமர்சிக்கும் வகையில் ஹர்பஜன் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில், "முதல் பந்தில் அவுட் ஆகவில்லை என்றால் மட்டும் நீங்கள் நீண்ட நேரம் களத்தில் நிலைத்திருப்பீர்கள் என நினைக்கிறீர்களா? இதுதொடர்பாக கண்ணீர் வடிப்பதை நிப்பாட்டுங்கள். ஓய்வுபெற்ற பின் நீங்கள் இயல்பாக பேசுவீர்கள் என நினைத்தேன். ஆனால், ஒரு சில விஷயங்கள் மாறவே மாறது என்பதற்கு நீங்கள் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறீர்கள்" என பதிவிட்டிருந்தார்.

Harbhajan Singh
ஹர்பஜன் சிங் பதிலடி

ஹர்பஜன் சிங் வீசிய பந்து கில்கிறிஸ்டிடன் காலில் பட்டதால், நடுவர் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் என தீர்ப்பு வழங்கினார். ஆனால், பந்து தனது பேட்டில் இன்சைடான பிறகுதான் காலில் பட்டது, அதனால், தான் நாட் அவுட் என்பதை போல கில்கிறிஸ்ட் பெவிலியனுக்குத் திரும்பினார். அதிரடி பேட்ஸ்மேனான கில்கிறிஸ்ட் அப்போட்டியில் கிங் பேர் ஆனார். (இரண்டு இன்னிங்ஸிலும் டக் அவுட் ஆனால் கிங் பேர் என்று அர்த்தம்).

ஆஸ்திரேலிய அணிக்காக 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கில்கிறிஸ்ட் 5,570 ரன்களை எடுத்துளளார். மறுமுனையில், இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

கங்குலி மீண்டும் அழைக்கப்பட்டிருந்தால் அது பாகிஸ்தானின் சிறந்த வெற்றியாக மாறியிருக்காது - சேப்பாக் டெஸ்ட் ரீவைண்ட்

நடுவரின் தீர்ப்பை சரிபார்க்கும் ரிவ்யூ முறை அப்போது இல்லை என்றாலும், நடுவர்களின் முடிவுகள் பெரும்பாலான நேரத்தில் சரியாகதான் இருந்துள்ளது. தற்போதைய நவீனகால கிரிக்கெட்டில் ரிவ்யூ இருப்பது முக்கியமல்ல. அதை சரியான நேரத்தில் பயன்படுத்துவதுதான் முக்கியம். ஏனெனில், ஆஷஸ் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. இதில், இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயான் வீசிய பந்து பென் ஸ்டோக்ஸின் காலில் பட்டது.

எல்பிடபள்யூ முறையில் ஸ்டோக்ஸ் அவுட் என்றாலும், நடுவர் நாட் அவுட் என்றே தீர்ப்பு வழங்கினார். ரிப்ளேவில் ஸ்டோக்ஸ் அவுட் என தெரியவந்தது. ஆனால், அப்போது ஆஸ்திரேலியாவிடம் ரிவ்யூ இல்லை. அந்த அணியின் கேப்டன் டிம் பெய்ன் அதற்கு முன்னதாக தேவையில்லாமல் ரிவ்யூ எடுத்து, அதை வீணடித்துவிட்டார். இதனால், ரிவ்யூ இருந்தால் மட்டும் போதாது, அதை சரியான நேரத்தில் பயன்படுத்தத் தெரியவும் வேண்டும் என்பதற்கு டிம் பெய்ன் சிறந்த எடுத்துக்காட்டாக மாறினார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.