ETV Bharat / sports

பாண்டிங்குடன் நடந்த 'மேஜிக்'... நினைவுகூர்ந்த ரோஹித்!

author img

By

Published : Mar 27, 2020, 10:18 AM IST

மும்பை: 2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின்போது பாண்டிங்குடன் நேரம் செலவிட்டது பற்றிய நினைவலைகளை ரோஹித் சர்மா பகிர்ந்துள்ளார்.

still-looking-forward-fingers-crossed-for-ipl-2020-rohit

கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 21 நாள்கள் பொதுமக்கள் அனைவரும் வெளியே வரத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் வீட்டிலேயே முடங்கும் சூழல் நிலவிவருகிறது.

இந்நிலையில் நேற்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மாவை இன்ஸ்டாகிராமில் நேர்காணல் செய்தார். அதில் கெவின் பீட்டர்சன் பாண்டிங்குடன் வேலைசெய்த அனுபவம் பற்றி கேட்டபோது,

''2013ஆம் ஆண்டு மும்பை அணியின் கேப்டனாக ரிக்கி பாண்டிங் ஒப்பந்தம்செய்யப்பட்டார். ஆனால் தொடரின் பாதியிலேயே கேப்டன்ஷிப்பை என்னிடம் கொடுத்து, பயிற்சியாளர் குழுவோடு இணைந்து அணிக்காகப் பணியாற்றினார்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் தொடரின் பாதியில் பதவி விலகிவிட்டு அணிக்குப் பயிற்சியாளராக வந்தது மிகவும் தைரியமான முடிவு. இளம் வீரர்களுக்கு பேட்டிங் பயிற்சியும், எனக்கு கேப்டன்சி பற்றி நுணுக்கங்களையும் கற்றுக் கொடுத்தார்.

அந்தாண்டுதான் மும்பை அணி தொடரைக் கைப்பற்றியது. பாண்டிங்குடன் வேலைசெய்ததை சரியான வார்த்தையில் கூறவேண்டுமென்றால் 'மேஜிக்' என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தாண்டு ஐபிஎல் தொடருக்காக மும்பை அணியில் சிறந்த வீரர்கள் இணைந்துள்ளனர். போல்ட், கவுல்டர் நைல், கிறில் லின் ஆகியோர் மும்பை மைதானத்திற்குச் சரியாக இருப்பார்கள். போல்ட்டின் ஸ்விங்குடன், பும்ரா இணைவது சரியான காம்பினேஷனாக இருக்கும்.

கரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டவுடன் ஐபிஎல் நடக்கும் என எதிர்பார்க்கிறேன், பார்க்கலாம்'' என்றார்.

இப்போது மும்பை அணியின் பயிற்சியாளர் மகிளா ஜெயவர்தனே உடனான அனுபவம் பற்றி ரோஹித் பேசுகையில், ''மகிளா எப்போதும் அமைதியாளர். தனக்கு என்ன தேவை என்பதைச் சரியாகப் புரிந்து, அனைவரிடமும் வேலை வாங்குவார். தனக்கு சரி என்று தோன்றினால் மட்டுமே செய்யச் சொல்வார்'' என்றார்.

இதையும் படிங்க: பயிற்சியாளராக மாறிய ‘ஹிட்மேன்’ - ரசிகர்கள் உற்சாகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.