ETV Bharat / sports

ஆஸ்திரேலியத் தொடர் முழுவதும் கோலி இல்லாதது ஏமாற்றமே - ஸ்டீவ் வாக் - அனுஷ்கா ஷர்மா கர்ப்பம்

2021 ஜனவரி மாதத்தில் கோலி - அனுஷ்கா ஷர்மா தம்பதியினருக்கு குழந்தை பிறக்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டி விளையாடிய பிறகு நாடு திரும்ப இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.

Steve Waugh
ஸ்டீவ் வாக்
author img

By

Published : Nov 11, 2020, 8:25 AM IST

டெல்லி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பங்கேற்காமல் இருப்பது, ஏமாற்றம் அளிப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டீவ் வாக் கூறியிருப்பதாவது; 'ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முக்கியத்துவம் வாய்ந்த தொடரிலிருந்து பாதியிலேயே கோலி போன்ற வீரர் வெளியேறுவது ஏமாற்றம் அளிக்கிறது. அதே சமயம் சிறிது ஆச்சர்யமாகவும் உள்ளது. ஏனென்றால் விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியத்தொடராக அமையும் விதமாக, இந்த தொடர் முன்னதாக அமைந்திருந்தது. இருப்பினும், குடும்பத்துக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம்' என்றார்.

டிசம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, அடிலெய்டில் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டிக்குப் பின்னர், தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுக்கு ஜனவரி மாதம் குழந்தை பிறக்கவுள்ள நிலையில், கிரிக்கெட் வீரர் கோலி நாடு திரும்ப பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.

இதைத்தொடர்ந்து டிசம்பர் 26ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரிலும், மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் முறையே ஜனவரி 7, 15ஆம் தேதிகளில் சிட்னி, பிரிஸ்பேன் நகரங்களிலும் நடைபெறவுள்ளது.

டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகள் நடைபெறுகிறது. நவம்பர் 27ஆம் தேதி முதல் ஒரு நாள் போட்டி சிட்னியில் தொடங்குகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்கள், கரோனா வைரஸ் பரவல் காரணமாக கட்டாயத் தனிமைப்படுத்தலில் இருப்பது அவசியம் என்பதால், விரைவில் ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்கவுள்ளனர்.

விராட் கோலி மூன்று ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகள், இரவு - பகல் ஆட்டமாக நடைபெறவிருக்கும் முதல் டெஸ்ட் போட்டி ஆகியவற்றுக்கு கேப்டனாக செயல்படவுள்ளார். இத்தொடரின் போட்டிகள் அனைத்தும் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க: ’கோலி இல்லைனா என்ன... மேட்ச் பட்டாசா இருக்கும்’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.