இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நிறைவடைந்த இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களை குவித்தது.
முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸில், நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன் மூலம் இந்திய அணிக்கெதிராக அதிக டெஸ்ட் சதங்களை அடித்த வீரர் (எட்டு சதங்கள்) எனும் சாதானையை கிரிக்கெட் ஜாம்பவான்கள் ரிக்கி பாண்டிங், விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகியோருடன் பகிர்ந்துள்ளார்.
-
Quick thinking!
— cricket.com.au (@cricketcomau) January 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Live #AUSvIND: https://t.co/xdDaedY10F pic.twitter.com/hNYaXsLYxQ
">Quick thinking!
— cricket.com.au (@cricketcomau) January 8, 2021
Live #AUSvIND: https://t.co/xdDaedY10F pic.twitter.com/hNYaXsLYxQQuick thinking!
— cricket.com.au (@cricketcomau) January 8, 2021
Live #AUSvIND: https://t.co/xdDaedY10F pic.twitter.com/hNYaXsLYxQ
மேலும் இந்திய அணிக்கெதிராக குறைந்த இன்னிங்ஸில் (25 இன்னிங்ஸ்) அதிக சதங்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸின் விவியன் ரிச்சர்ட்ஸ் 41 இன்னிங்ஸ்களிலும், ரிக்கி பாண்டிங் 51 இன்னிங்ஸ்களிலும் இச்சாதனையை படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரிஸ்பேனில் ஊரடங்கு அமல்: சந்தேகத்தில் நான்காவது டெஸ்ட்?