ETV Bharat / sports

மிகச்சிறந்த 50 ஐபிஎல் போட்டிகள்; நாளை முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில்! - மிகச்சிறந்த 50 ஐபிஎல் போட்டிகள்

கரோனா வைரஸ் காரணமாக பல்வேறு விளையாட்டு போட்டிகள் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், நாளை முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த 50 போட்டிகள் ஒளிப்பரப்பாகவுள்ளது.

Star Sports will bring to fans 50 of the greatest IPL games from Sunday

author img

By

Published : Mar 29, 2020, 12:03 AM IST

கரோனா வைரஸ் (கோவிட் -19) தொற்று காரணமாக பல்வேறு விளையாட்டு போட்டிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தியாவில் நாளை தொடங்கவிருந்த ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஏப்ரல் 15க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கோவிட் -19 வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் ஏப்ரல் 14வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், வீட்டிலுள்ள ரசிகர்களுக்கு பொழுதுபோக்கு ஏற்படுத்தும் விதமாக ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த 50 போட்டிகளை ஒளிபரப்ப ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் முடிவு செய்துள்ளது.

அதன்படி நாளை இரவு 8 மணி முதல் 8.30 மணிவரை 50 போட்டிகளின் ஹைலைட்ஸ் ஒளிப்பரப்பாகவுள்ளன இதில், கொல்கத்தா - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் முதல் போட்டி, 2018இல் பெங்களூரு - சென்னை அணிகள் மோதிய போட்டி உள்ளிட்ட முக்கியமான போட்டிகள் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க: இவர்கள் இருவரும் தான் ஐபிஎல்லின் சிறந்த பேட்ஸ்மேன்கள்; ஆனால் அது கோலியோ, கெயிலோ கிடையாது’ - பிராட் ஹாக்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.