ETV Bharat / sports

#CPL2019: எலிமினேட்டரில் வெல்ல போவது யார்? இலக்கை நிர்ணயித்தது பேட்ரியாட்ஸ்! - top sports

கயானா: கரீபியன் பிரிமியர் லீக்கின் எலிமினேட்டர் சுற்றில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 126 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

#CPL2019
author img

By

Published : Oct 6, 2019, 11:52 PM IST

#CPL2019:கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்று வரும் எலிமினேட்டர் சுற்றில் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணியின் துவக்க வீரர்கள் முகமது ஹபீஸ், எவின் லீவிஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய லாரி எவன்ஸ் அதிரடியாக விளையாடி அணியின் ரன்கணக்கை உயர்த்தத் தொடங்கினார்.

ஆனால் மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியனுக்கு திரும்ப, எவன்ஸ் சிறப்பாக விளையாடி அரைசதமடித்தார். இதன் மூலம் பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை எடுத்தது.

பேட்ரியாட்ஸ் அணியில் அதிகபட்சமாக லாரி எவன்ஸ் 47 பந்துகளில் அரைசதமடித்து அசத்தினார். நைட் ரைடர்ஸ் அணி சார்பில் அகீல் ஹொசைன் சிறப்பாக பந்துவீசி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதனைத் தொடர்ந்து தற்போது டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது.

இதையும் படிங்க: பெண் குழந்தைக்கு அப்பாவானார் துணை கேப்டன் ரஹானே! வேடிக்கை ஆரம்பம் என ஹர்பஜன் ட்வீட்

Intro:Body:

CPL eliminator game

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.