ETV Bharat / sports

ஆஸி. லெஜண்ட்ஸிடம் த்ரில் வெற்றிபெற்ற இலங்கை லெஜண்ட்ஸ்!

உலக சாலைப் பாதுகாப்பு டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் அணி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.

author img

By

Published : Mar 9, 2020, 1:27 PM IST

Sri Lanka Legends defeated Aussie Legends by seven runs in Road Safety WorldSeries

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கமாக உலக சாலைப் பாதுகாப்பு டி20 கிரிக்கெட் தொடர் மும்பையில் நடைபெற்றுவருகிறது. இதில், இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து அணிகளைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஜாம்பவான் வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இலங்கை லெஜண்ட்ஸ் - ஆஸி. லெஜண்ட்ஸ்

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இதன் முதல் போட்டியில் இந்திய லெஜண்ட்ஸ் அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸை வீழ்த்தியது.

இந்நிலையில், நேற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தில்ஷான் தலைமையிலான இலங்கை லெஜண்ட்ஸ் அணி, பிராட் ஹாடின் தலைமையிலான ஆஸ்திரேலிய லெஜண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது.

Sri Lanka LegenSri Lanka Legends defeated Aussie Legends by seven runs in Road Safety WorldSeriesds defeated Aussie Legends by seven runs in Road Safety WorldSeries
தில்ஷான்

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை லெஜண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை எடுத்தது. அந்த அணி தரப்பில் ரொமேஷ் களுவதிரன 30, கமரா கபுகெதேர 28 ரன்கள் அடித்தனர். ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ் அணி சார்பில் ஸாவியர் டோஹர்டி, ஜேசன் கிரேசா, பிராட் ஹாட்ஜ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, 162 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய லெஜண்ட்ஸ் அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டாகச் சரிந்தன. தொடக்க வீரர் மைக்கேல் க்ளிங்கர் ரன் ஏதும் அடிக்காமல், சமிந்தா வாஸ் பந்துவீச்சில் நடையைக் கட்டினார்.

அவரைத் தொடர்ந்து டிராவிஸ் பிர்ட் (4), மார்க் காஸ்க்ரூவ் (1), பிராட் ஹாட்ஜ் (7), பிராட் ஹாடின் (10), ஷேன் லீ (0), ஜேசன் கிரேசா (6), க்லின்ட் மெக்காய் (8) ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாக ஆஸ்திரேலியா 14.3 ஓவர்களில் எட்டு விக்கெட்டை இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

நேதன் ரியர்டான்

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபக்கம் நெதன் ரியார்டான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். இந்த நிலையில், ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி நான்கு பந்துகளில் எட்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரியர்டான் 96 ரன்களில் ஆட்டமிழந்தார். 53 பந்துகள் மட்டுமே எதிர்கொண்ட அவர் ஒன்பது பவுண்டரிகளும், ஐந்து சிக்சர்களையும் விளாசினார்.

இறுதியில், ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ் அணி 19.5 ஓவர்களில் 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் தில்ஷான் மூன்று, ரங்கனா ஹெராத், ஃபர்வீஸ் மஹரூஃப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும், சமிந்தா வாஸ் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, நாளை டிஒய் பட்டில் மைதானத்தில் நடைபெறவுள்ள மூன்றாவது போட்டியில் சச்சின் தலைமையிலான இந்திய லெஜண்ட்ஸ் அணி, இலங்கை லெஜண்ட்ஸுடன் மோதவுள்ளது.

இதையும் படிங்க: ஆஸி.யிடம் சரணடைந்த இந்திய அணி... டி20 உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.