தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்தத் தொடருக்கான இரு அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் ஆலோசகராக ஜாக் காலிஸ் நியக்கப்பட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி செஞ்சுரியனில் நடைபெறவுள்ளது. சமீப நாட்களாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டின் ஃபார்ம் ஏற்ற இறங்களுடன் உள்ளது. இந்நிலையில், ஜோ ரூட்டின் ஃபார்ம் குறித்து ஜாக் காலிஸ் கூறுகையில்,
"ஜோ ரூட் உலகத் தர வாயந்த வீரர் என்பதில் எந்த சந்தகமும் இல்லை. அவர் தற்போது மோசமான ஃபார்மில் இருப்பதால் அவர் இந்தத் தொடரில் நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த முயற்சிப்பார். அதேசமயம், தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் அவருக்கு கடும் நெருக்கடியைத் தருவோம். இங்கிலாந்து அணியின் துருப்புச்சீட்டான பென் ஸ்டோக்ஸை அவுட் செய்யவும் தாங்கள் திட்டம் திட்டியுள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க: கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறி குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் அளித்த கோலி