#INDvsRSA: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி தற்போது மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்தியா முதல் டெஸ்ட் போட்டியை 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த அக்டோபர் 10ஆம் தேதி தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 600 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 275 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 189 ரன்களும் எடுத்தது.
இதன் மூலம் இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனைப்படைத்தது. இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளன்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மஹாராஜ் பீல்டிங்கின் போது காயமடைந்தார்.
அதன்பின் அவரை பறிசோதித்த மருத்துவர்கள் குழு அவரது தோள்பாட்டையில் முறிவடைந்துள்ளதை உறுதிப்படுத்தினர். இதனையடுத்து இந்திய அணியுடனான மூன்றாவது டெஸ்டுகான தென் ஆப்பிரிக்க அணியிலிருந்து விளகியுள்ளார்.
-
#CSAnews George Linde to replace Keshav Maharaj https://t.co/GQbsgy4HoD pic.twitter.com/3xcseDLRux
— Cricket South Africa (@OfficialCSA) October 13, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#CSAnews George Linde to replace Keshav Maharaj https://t.co/GQbsgy4HoD pic.twitter.com/3xcseDLRux
— Cricket South Africa (@OfficialCSA) October 13, 2019#CSAnews George Linde to replace Keshav Maharaj https://t.co/GQbsgy4HoD pic.twitter.com/3xcseDLRux
— Cricket South Africa (@OfficialCSA) October 13, 2019
அவருக்கு பதிலாக அணியில் அறிமுக வீரரான ஜார்ஜ் லிண்டேவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரை இழந்துள்ள நிலையில், தற்போது அணியின் முன்னணி பந்துவீச்சாளர் காயம் காரணமாக விலகியுள்ளது மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆஸி.யின் சாதனையை அசால்ட் செய்த கோலி அண்ட் கோ!