இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான மூன்று நாள் பயிற்சி ஆட்டம் டிச.06 ஆம் தேதி சிட்னியில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தது.
அதன்படி இந்திய அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களுடன் முதல்நாள் ஆட்டத்தை நிறைவுசெய்தது. இந்திய அணி தரப்பில் கேப்டன் ரஹானே 108 ரன்களுடனும், முகமது சிராஜ் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி 247 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இந்திய அணி சார்பில் கேப்டன் ரஹானே 117 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் தடுமாற்றத்தை சந்தித்தாலும், கேமரூன் கிரீனின் அசத்தலான சதத்தால் ஃபாலோ ஆனை தவிர்த்து, இரண்டாம் நாள் ஆட்டத்தை நிறைவுசெய்தது.
இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாவது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஏ அணி 309 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 125 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதைத்தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா ஏ அணியில் பிரித்வி ஷா 19, சுபமன் கில் 29, புஜாரா ரன் ஏதுமில்லை, விஹாரி 28, கேப்டன் ரஹானே 28 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சஹா அரைசதம் கடந்து அணியை முன்னிலைப்படுத்தினார். பின்னர் 189 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு 131 ரன்களை இழக்காகவும் நிர்ணயித்தது.
வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் ஜோ பர்ன்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வில் புகோவ்ஸ்கியும் காயம் காரணமாக ரிட்டையர் ஹர்ட் முறையில் வெளியேறினார்.
-
The tour match between Australia A and Indians ends in a draw.
— BCCI (@BCCI) December 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Final Score:
Indians: 247/9d & 189/9d
Australia A: 306/9d & 52/1 pic.twitter.com/DqMmRBjuP3
">The tour match between Australia A and Indians ends in a draw.
— BCCI (@BCCI) December 8, 2020
Final Score:
Indians: 247/9d & 189/9d
Australia A: 306/9d & 52/1 pic.twitter.com/DqMmRBjuP3The tour match between Australia A and Indians ends in a draw.
— BCCI (@BCCI) December 8, 2020
Final Score:
Indians: 247/9d & 189/9d
Australia A: 306/9d & 52/1 pic.twitter.com/DqMmRBjuP3
இதனால் மூன்றால் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய ஏ அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான மூன்று நாள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது.
இதையும் படிங்க:ஜே&கே-வின் அப்துல் சமத்தை பாராட்டிய சுரேஷ் ரெய்னா!