வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் போட்டி எட்பாஸ்டனில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவின் பேன்கிரஃப்ட் மற்றும் டேவிட் வார்னர் அடுத்தடுத்து தனது விக்கெட்டுகளை ஸ்டூவர்ட் பிராட்டிடம் இழந்தனர். பின்னர் களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் எப்போதும் போல தனது இயல்பான ஆட்டத்தை ஆடினார்.
பந்தை சேதப்படுத்திய வழக்கில் ஒரு வருட தடைக்கு பின் பங்குபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி அணியை சரிவிலிருந்து மீட்டார். மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருக்க ஸ்மித் நிலைத்து நின்று சதம் விளாசினார். அதன் பின் 144 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிராட் வீசிய பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர் களமிரங்கிய வீரர்கள் செற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலியா அணி 284 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டுவர்ட் பிராட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்தின் ரோரி பர்ன்ஸ் 4 ரன்களுடனும், ஜேசன் ராய் 6 ரன்களுடனும் களத்திலுள்ளனர்.