ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் ஸ்டீவ் ஸ்மித். இவர் முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டவர். கடந்த 2018ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியதாக ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. பின்னர் இருவரும் தடைக்காலம் முடிந்து தற்போது மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தற்போதைய கேப்டனாக இருக்கும் டிம் பெய்ன் ஓய்வு பெற்ற பின், அணியின் கேப்டன் பதவியை ஸ்டீவ் ஸ்மித்திற்கு வழங்க வேண்டுமென அந்த அணியின் முன்னாள் வீரர் மார்க் வாக் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய மார்க் வாக், “என்னைப் பொறுத்துவரை ஆஸ்திரேலிய அணியின் சிறந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தான். ஏனெனில் ஆவர் திறன்மிக்க வீரர், அதனால்தான் அவர் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் அணியில் இடம்பெற்றுள்ளார். இவர் முன்னதாகவும் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தி பல்வேறு வெற்றிகளைப் பெற்றுத்தந்துள்ளார்.
அவர் ஏன் மீண்டும் கேப்டனாக வேண்டும்? என்று நிறைய பேர் சொல்வது எனக்கு தெரியும். ஆனால் அவர் செய்த குற்றத்திற்கான தண்டனையை அனுபவித்துவிட்டார். அதனால் அவரை ஏன் மீண்டும் கேப்டனாக தேர்வு செய்யக்கூடாது. என்னைப் பொறுத்தளவில் ஸ்மித் ஒரு சிறந்த கேப்டன். தற்போதுள்ள கேப்டன் ஓய்வு பெற்றவுடன் அணியை வழிநடத்தும் பொறுப்பை ஸ்மித்திடம் ஒப்படையுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:லாலிகா: காடிஸை பந்தாடியது செல்டோ விகோ!